For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

புதையலுக்கான சரியான பூட்டு எது.? கண்டுபிடிக்க கடற்கொள்ளையருக்கு உதவுங்கள்.!

04:36 PM Oct 03, 2023 IST | செந்தில்குமார்
புதையலுக்கான சரியான பூட்டு எது   கண்டுபிடிக்க கடற்கொள்ளையருக்கு உதவுங்கள்
Find Lock [file image]
Advertisement

புதிர்கள் என்பது ஒரு வேடிக்கையான மற்றும் உற்சாகமான ஒன்றாகும். சிக்கலான புதிர்கள் கற்றல் மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன்களை வளர்க்க உதவுவதோடு படைப்பாற்றல், நினைவாற்றல் ஆகியவற்றை மேம்படுத்த உதவும். குழந்தைகள் தங்கள் சிந்தனை திறன் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்த புதிர்கள் ஒரு சிறந்த வழி என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அந்த வகையில், இப்பொழுது உங்கள் முன் வைக்கப்படும் புகைப்படத்தை நன்றாக கவனிக்க வேண்டும். இதில் ஒரு கடற்கொள்ளையர் கையில் புதையல் பெட்டிக்கான சாவி ஒன்று உள்ளது ஆனால் அவருக்கு முன்னால் ஆறு புதையல் பெட்டிகளும் அவற்றில் ஆறு விதமான பூட்டுகளும் உள்ளன.

இந்த ஐந்து பேரில் ஒருவர் உயிருடன் இல்லை..! யார் அவர்.?

அவருக்கு உதவி செய்யும் விதமாக நீங்கள் அவர் கையில் வைத்திருக்கக்கூடிய சாவியானது எந்த புதையல் பெட்டியில் உள்ள பூட்டில் சரியாக பொருந்தும் என கண்டுபிடிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான சவால். இந்த சவாலை செய்வதற்கு உங்களுக்கு 30 வினாடிகள் மட்டுமே வழங்கப்படும். அதற்குள் நீங்கள் சரியான புதையல் பெட்டியை கண்டுபிடிக்க வேண்டும்.

இப்போது உங்களுக்கான நேரம் ஆரம்பமாகிவிட்டது.

ஒன்று... இரண்டு.... மூன்று....

Find Lock
Find Lock [file image]

நேரம் போய்க்கொண்டிருக்கிறது..

27... 28... 29... 30

உங்களுக்கு வழங்கப்பட நேரம் முடிந்து விட்டது. இந்த 30 வினாடிகளுக்குள் சாவிக்கான சரியான பூட்டை நீங்கள் கண்டுபிடித்து இருந்தால் உங்களுக்கு எங்களது வாழ்த்துக்கள். இப்பொழுது இதற்கான சரியான பதிலை பார்ப்போம்.

விடை: ஐந்தாவது புதையல் பெட்டி

IQ Test: இதில் ஒருவர் உயிருடன் இல்லை, யார் அவர்.? கண்டுபிடிங்க பார்க்கலாம்..

விளக்கம்:

இதில் இருக்கும் ஒவ்வொரு புதையல் போட்டியில் இருக்கும் சாவித் துவாரத்தை நன்றாக கவனியுங்கள். அந்த சாவித் துவாரத்தையும், இந்த கடல் கொள்ளையர் கையில் இருக்கும் சாவியின் அச்சையும் நன்றாக கவனித்தால், மற்ற பெட்டிகளை விட ஐந்தாவது பெட்டியில் இருக்கும் பூட்டின் துவாரமானது சரியாக பொருந்தும். இதனால் ஐந்தாவது புதையல் பெட்டியே சரியான விடை ஆகும்.

Find Lock
Find Lock [file image]

இது போன்ற ஒரு புதிர் உங்கள் மூளை செல்களுக்கு இடையான இணைப்பை இன்னும் வலுப்பெற செய்ய உதவுவதற்காக ஒரு சிறந்த வழியாகும்.

Tags :
Advertisement