For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

முதல் விக்கெட் எடுத்த குஷி... "கார்ட்வீல்" கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்! வைரலாகும் வீடியோ!

முதல் விக்கெட் எடுத்த குஷி     கார்ட்வீல்  கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்  வைரலாகும் வீடியோ
cartwheel celebration Kevin Sinclair [file image]
Advertisement

வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் கெவின் சின்க்ளேர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது தனது முதல் டெஸ்ட் விக்கெட்டை எடுத்த பிறகு கார்ட்வீல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு அனைவரையும் திகைக்க வைத்தார். ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் பகல்-இரவு ஆட்டமாக நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர், களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி முதலில் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய உஸ்மான் கவாஜா சிறப்பாக விளையாடி 75 ரன்கள் எடுத்து 8-வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

மேட்ச் பிக்சிங்கில் சோயிப் மாலிக்? ஒப்பந்தத்தை ரத்து செய்த பிபிஎல் நிர்வாகம் !

உஸ்மான் கவாஜா, வெஸ்ட் இண்டீஸ் அணியின் அறிமுகம் வீரரான சுழற்பந்து வீச்சாளர் கெவின் சின்க்ளேர் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்படி, சிறப்பாக விளையாடி வந்த உஸ்மான் கவாஜா, கெவின் சின்க்ளேர் பந்தை தூக்கி அடிக்க முயற்சித்த போது முதல் ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். டர்னிங் டெலிவரி மூலம் உஸ்மான் கவாஜாவின் முக்கியமான விக்கெட்டை கெவின் சின்க்ளேர் பெற்றார்.

முதல் ஸ்லிப்பில் கேட்சை பிடித்து அலிக் அதானாஸ் அசத்தினார். எனவே, நீண்ட நேரமாக களத்தில் நின்ற கவாஜாவின் விக்கெட்டை அறிமுக போட்டியில் வீழ்த்திய உற்சாகத்தில், கெவின் சிசின்க்ளேர் ஜிம்னாஸ்டிக் வீரர்களை போன்று டைவ் அடித்து (Cartwheel Celebration) சந்தோசத்தை வெளிப்படுத்தினார். அவரது "கார்ட்வீல்" கொண்டாட்டத்தால் அனைவரையும் திகைக்க வைத்தார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
Advertisement