For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

வெறும் ரூ.8,499 பட்ஜெட்.. 8 ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.! அறிமுகமானது போகோ சி65.!

02:36 PM Dec 15, 2023 IST | செந்தில்குமார்
வெறும் ரூ 8 499 பட்ஜெட்   8 ஜிபி ரேம்   50எம்பி கேமரா   அறிமுகமானது போகோ சி65
POCOC65 [File Image]
Advertisement

போகோ (POCO) நிறுவனம் அதன் சி-சீரிஸில் போகோ சி65 (POCO C65) என்கிற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த போகோ சி65  ஆனது நிறுவனத்தின் ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆகும். இதில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும்  600 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்ட 6.74 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது.

எல்இடி ஃபிளாஷுடன் டிரிபிள் ரியர் கேமரா சென்சார்கள் உள்ளன. 8 எம்பி செல்ஃபி கேமரா உள்ளது. மேலும், இதில் கார்னிங் கொரில்லா கிளாஸ், சைடு மௌண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார், 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொடுக்கப்பட்டுள்ளது. யுஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5000 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

16ஜிபி ரேம்..50எம்பி கேமரா..5,000mAh பேட்டரி.! உலக அளவில் அறிமுகமானது விவோ X100, X100 Pro.!

இந்த ஸ்மார்ட்போன் மேட் பிளாக், பேஸ்டல் ப்ளூ ஆகிய நிறங்களில் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரவுள்ளது. இதன் முதல் விற்பனைக்கு டிசம்பர் 18 ஆம் தேதி மதியம் 12 மணிக்குத் தொடங்கவுள்ளது. புதிய போகோ போனை ஐசிஐசிஐ கார்டு மூலம் பணம் செலுத்தி வாஙகினால் ரூ.1,000 உடனடி தள்ளுபடியை நிறுவனம் வழங்குகிறது.

போகோ சி65 அம்சங்கள்

அம்சங்கள்போகோ சி65
டிஸ்பிளே6.74 இன்ச் எச்டி+, 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 600 Nits பிரைட்னஸ்
பிராசஸர்மீடியாடெக் ஹீலியோ ஜி 85
ஓஎஸ்ஆண்ட்ராய்டு 13, எம்ஐயுஐ 14
கேமரா50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா
செல்ஃபி 8 எம்பி
பேட்டரி5000mAh
சார்ஜிங்18W ஃபாஸ்ட் சார்ஜிங் 
ரேம் + ஸ்டோரேஜ்4 ஜிபி + 128 ஜிபி, 6 ஜிபி + 128 ஜிபி, 8 ஜிபி + 256 ஜிபி
மற்ற அம்சங்கள்டூயல் சிம் கார்டு ஸ்லாட், 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5mm ஆடியோ ஜாக்
பாதுகாப்புசைடு மௌண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார், ஃபேஸ் அன்லாக்

விலை 

வேரியண்ட்   விலை
4 ஜிபி + 128 ஜிபிரூ.8,499
6 ஜிபி + 128 ஜிபிரூ.9,499
8 ஜிபி + 256 ஜிபிரூ 10,999
Tags :
Advertisement