For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

விஜய்யின் GOAT படத்தில் விஜயகாந்த்.! மாஸ்டர் பிளேன் போட்ட வெங்கட் பிரபு...

05:46 PM Feb 12, 2024 IST | கெளதம்
விஜய்யின் goat படத்தில் விஜயகாந்த்   மாஸ்டர் பிளேன் போட்ட வெங்கட் பிரபு
vijay - vijayakanth [file image]
Advertisement

நடிகர் விஜய் நடித்து வரும் கோட் (The Greatest of All Time) திரைப்படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி நாயர், மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, VTV கணேஷ், வைபவ், பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் கஞ்சா கருப்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது புதுச்சேரி பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், Artificial Intelligence எனப்படும் AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் மறைந்த கேப்டன் விஜயகாந்த் கதாபாத்திரம் இடம் பெறசெய்ய இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது

‘GOAT’ படம் வேண்டாம்! தெறித்தோடிய நெட்பிளிக்ஸ்?

அதற்காக விஜயகாந்த் குடும்பத்தினரின் அனுமதியையும் படக்குழுவினர் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, படத்தின் மூன்று லூக் போஸ்டர்கள் வெளியாகி இருக்கும் நிலையில், விரைவில் படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement