For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

விஜய் - ராஷ்மிகா செம குத்தாட்டம்...வெளியானது வாரிசு படத்தின் 'ரஞ்சிதமே' பாடல்.!

05:35 PM Nov 05, 2022 IST | பால முருகன்
விஜய்   ராஷ்மிகா செம குத்தாட்டம்   வெளியானது வாரிசு படத்தின்  ரஞ்சிதமே  பாடல்
Advertisement

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தை பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார்.

படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். நேற்று முன்தினம் படத்தின் முதல் பாடல் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என ப்ரோமோவுடன் அறிவிக்கப்பட்டிருந்தது. ப்ரோமோவில் பாடலை விஜய் பாடியதும், பாடலின் பெயர் 'ரஞ்சிதமே' என்றும் தெரிய வந்தது.

இந்த நிலையில், அந்த அறிவிப்பை தொடர்ந்து ரஞ்சிதமே பாடல் தற்போது வெளியாகியுள்ளது. பாடலில் விஜயின் குரலும், தமனின் இசையும் காண்போர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதைபோல், சிறிய சிறிய காட்சிகளில் விஜய் - ராஷ்மிகா இணைந்து ஆடிய நடனமும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பாடலை எழுத்தாளர் விவேக் எழுதியுள்ளார்.

பாடல் மிகவும் அருமையாக இருப்பதால் பல சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் பாடல் என்றாலே சமீபகாலமாக 24 மணி நேரத்திலே பல சாதனைகள் படைத்தது வருகிறது. இந்த பாடல் என்னென்ன சாதனைகள் செய்கிறது, எந்தெந்த பாடல்களின் சாதனைகளை முறியடிக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags :
Advertisement