For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

திராவிட பாதை உருவான விதம்.! லண்டனில் தமிழர் பெருமிதம்.!

02:58 PM Jan 20, 2024 IST | மணிகண்டன்
திராவிட பாதை உருவான விதம்   லண்டனில் தமிழர் பெருமிதம்
Vignesh Karthik - The Dravidian Pathway [File Image]
Advertisement

பெரியார் துவங்கிய சமூக நீதி இயக்கமானது அதன் பின்னர் அண்ணாவிடம் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் கட்சியாக உருவான வரலாறு என்ன என்பதை தமிழகத்தைச் சேர்ந்த விக்னேஷ் கார்த்திக் எனும் பட்டதாரி இளைஞர் ஆய்வு செய்து அதனை லண்டன் கல்லூரியில் சமர்ப்பித்துள்ளார். லண்டனைச் சேர்ந்த, லண்டன் கிங்ஸ் பல்கலைக்கழகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த விக்னேஷ் கார்த்திக் "திராவிட பாதை" பெரும் பெயரில் ஒரு ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

100 புதிய பேருந்துகள் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்த ஆய்வறிக்கையில் தந்தை பெரியார் துவங்கிய சமூக நீதி இயக்கமானது பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டு அதன் பின்னர் மறைந்த முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரை எனும் அண்ணாவின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பொருளாதார அரசியலை முன்னெடுத்து வாக்கு அரசியல் கட்சியாக எவ்வாறு மக்கள் மத்தியில் நிலைத்து நிற்கிறது,

மேலும் திராவிட அடையாளம் என்பது எவ்வாறு கட்டமைக்கப்பட்டது, அந்த கட்டமைப்பு தற்போது வரை எப்படி மக்களிடம் சென்று வாக்கு அரசியலாக நிலைத்து நிற்கிறது என்ற நீண்ட திராவிட வரலாறு பற்றியா ஆய்வு அறிக்கையை "திராவிட பாதை" எனும் பெயரில் விக்னேஷ் கார்த்திக் சமர்ப்பித்து உள்ளார்.

திராவிட பாதை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்து முனைவர் பற்று பட்டம் பெற்ற விக்னேஷ் கார்த்திக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தனது எக்ஸ் சமூக வலைதளபக்கத்தில் விக்னேஷ் கார்த்திக் இதனை பகிர்ந்துள்ளார். அதில், தனது 8 வருட யோசனை, லட்சியம். 4 வருட கல்லூரி படிப்பு. வழிகாட்டிகள், குடும்பத்தினர், நண்பர்களின் ஆதரவு ஆகியவற்றால் அரசியல், அறிவியல் மற்றும் பொதுக்கொள்கையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன்.

எனது ஆய்வறிக்கை திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் ஈ.வே.ராமசாமி எனும் தந்தை பெரியார் மற்றும் சி.என்.அண்ணாதுரை எனும் அண்ணா இடையே கட்சி அரசியல், சமூக நீதி இயக்கம் எவ்வாறு கட்சி அரசியலாக மாற்றம் பெற்றது என்பதை பற்றி இருந்தது என விக்னேஷ் கார்த்திக் குறிப்பிட்டு உள்ளார்.

Tags :
Advertisement