HomeTop Storiesஇந்தியா தமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமா லைஃப்ஸ்டைல்தொழில்நுட்பம்ஆன்மீகம்
Advertisement

தனுஷ் இயக்கும் புது படத்தின் காதலர் தின போஸ்டர் வெளியீடு.!

06:20 PM Feb 14, 2024 IST | கெளதம்
Neek - dd3 [File Image]
Advertisement

காதலர் தினத்தை ஒட்டி, நடிகர் தனுஷ் இயக்கும் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Advertisement

நடிகர் தனுஷ் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தை தொடர்ந்து, அடுத்ததாக தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், அவர் ஏற்கனவே தன்னுடைய 50வது படமான 'D50' திரைப்படத்தினை இயக்கி முடித்துவிட்டார்.

அந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் தனுஷ் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில், இந்த படத்துக்கு 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என தலைப்பு வைக்கப்பட்டு மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டது.

இந்த படத்தில் ஹீரோவாக பவிஷ் நடிக்கிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க, படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. காதல் கதையம்சத்தை கொண்டு உருவாகி இப்படத்தின் காதலர் தின சிறப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. இன்று காதலர் தினம் என்பதால், படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

Tags :
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்தனுஷ்Anikha SurendranDD3DhanushMatthew ThomasNEEKNilavukku enmel ennadi kobam
Advertisement