For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

#U19WC2024: அரையிறுதிக்குள் நுழைந்த 4 அணிகள்

10:00 PM Feb 03, 2024 IST | Ramesh
 u19wc2024  அரையிறுதிக்குள் நுழைந்த 4 அணிகள்
Advertisement

19 வயதிற்கு உட்பட்டோர் விளையாடி வரும் (ICC Under 19 World Cup 2024) உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. சூப்பர் சிக்ஸில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்ற நிலையில் அதில் தகுதி பெற்ற 4 அணிகள் தற்போது அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன.

ஏற்கனவே தென்னாப்பிரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்தன. இதையடுத்து அரையிறுதிக்குள் நுழையும் நான்காவது அணி எது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகள் சூப்பர் சிக்ஸ் போட்டியில் மோதின. இதில் பாகிஸ்தான் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில்லிங்கான வெற்றியை பெற்றது.

#INDvENG : 2-ம் நாள் ஆட்டம் முடிவு.. இந்திய அணி 171 ரன்கள் முன்னிலை..!

தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளை பெற்ற அந்த அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. இதை தொடர்ந்து பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியாவும், தென்னாப்பிரிக்கா அணியும் மோதுகின்றன. பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலியாவும், பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதவுள்ளன.

Tags :
Advertisement