For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

IPL 2024 : சி.எஸ்.கே-ஆர்.சி.பி போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது ! டிக்கெட் விலை எவ்ளோனு தெரியுமா ?

12:56 PM Mar 18, 2024 IST | Ahil
ipl 2024   சி எஸ் கே ஆர் சி பி போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது   டிக்கெட் விலை எவ்ளோனு தெரியுமா
IPL2024 [ file image]
Advertisement

IPL 2024 : ஐபிஎல் 2024 தொடருக்கான முதல் போட்டியானது வருகிற மார்ச்-22 ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன சென்னை அணியும் பெங்களூரு அணியும் மோதவுள்ளது. மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிறைந்த இந்த ஆண்டின் ஐபிஎல் தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டத்திற்கான அட்டவணையை மட்டுமே ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.

Read More :- TATA WPL 2024 : யார் யாருக்கு என்னென்ன விருதுகள் ? முழு பட்டியல் இதோ !

இந்த முதல் கட்ட ஐபிஎல் தொடர் மார்ச் 22-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த இடைப்பட்ட நாட்களில் மொத்தம் 21 போட்டிகள் நடைபெறும். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிஎஸ்கே நிர்வாகம், சென்னை அணியின் டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே பெற முடியும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி மார்ச் 22 -ம் நடைபெற போகும் சென்னை போட்டிக்கான டிக்கெட்டுகளின் விற்பனை இன்று தொடங்கி உள்ளது.

Read More :- 'தோனியும் அதை செய்து இருக்கிறார்… ரோஹித் அவரை விட 10 அடி முன்னே’ – மனம் திறந்த அஸ்வின்

ஒரு நபருக்கு அதிகபட்சமாக 2 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடைபெறும் போகும் அனைத்து ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளையும் Paytm Insider இணையத்தளத்திளும், Paytm ஆப்பிலும் பெறலாம். குறைந்தபட்ச டிக்கெட் விலையாக ரூ.1,700 அதிகபட்சமாக டிக்கெட் விலையாக ரூ.7,500 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

Read More :- IPL 2024 : சிஎஸ்கே போட்டிக்கான ஐபிஎல் டிக்கெட் இனி ஆன்லைனில் மட்டும் தான் ..!

இந்த ஐபிஎல் தொடரில் நடைபெற போகும் போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும் மற்றும் ஜியோ சினிமா ஆப்பிளும் நேரலையாக ஒளிபரப்பாகும் என அதிகாரபூர்வமாக ஐபிஎல் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், கடந்த வருடம் போல இந்த வருடமும் ஐபிஎல் போட்டிகளை ஜியோ சினிமா ஆப்பில் எந்த ஒரு கட்டணமும் இன்றி இலவசமாக பார்க்கலாம்.

Tags :
Advertisement