For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

பார்சலுக்கு சண்டை போடும் திருடர்கள் ..! வைரலாகும் நகைச்சுவை வீடியோ!!

12:03 PM Jun 22, 2024 IST | அகில் R
பார்சலுக்கு சண்டை போடும் திருடர்கள்     வைரலாகும் நகைச்சுவை வீடியோ
2 thieves Fight for Fed Ex Parcel [file image]
Advertisement

பென்சில்வேனியா: அமேசான், ஃபிலிப்கார்ட் போல டோர் டெலிவரி செய்யும் ஒரு நிறுவனம் தான் ஃபெட்எக்ஸ் (FedEx).  சமீபத்தில் ஒரு அமெரிக்காவின், பென்சில்வேனியா எனும் இடத்தில் ஒரு குடியிருப்பில் ஒரு வீட்டு வாசலில் வைத்து சென்ற ஃபெட்எக்ஸ் பார்ஸலுக்காக 2 திருடர்கள் போட்டி போட்டு சண்டை இட்டு கொண்டுள்ளனர்.

இது சம்மந்தமான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஃபெட்எக்ஸ் ஊழியர் ஒருவர் அந்த பார்சலை அந்த உரிமையாளர் வீட்டின் வாசல் முன் வைத்து விட்டு செல்வார்.

அவர் வைத்து விட்டு சென்ற அடுத்த ஒரு சில நொடிகளில் இரு புறத்தில் இருந்து இரண்டு திருடர்கள் வேகமாக விரைந்து அந்த பார்சலுக்காக சண்டை இடுவார்கள். அதில் ஒரு திருடன் கையில் ஆயுதம் ஏந்தி மற்றொரு திருடனை தாக்க முயற்சிப்பார்.

அதன்பின் அந்த பார்சலை எடுத்து கொண்டு அந்த ஓடுவார். அதன்பின் அந்த வீட்டின் வாசலில் இருந்த பூந்தொட்டியை கையில் எடுத்து கொண்டு அவரை விரட்டி செல்வார். இது அந்த வீட்டின் உரிமையாளரின் வீட்டு பெல் கேமராவில் பதிவாகி இருந்தது.

அதில் பதிவாகி இருந்த வீடியோவை அந்த வீட்டின் உரிமையாளர் இணையத்தில் பகிர்ந்து, " ஃபோன்களைப் பற்றி எனக்கு கவலைப்படவில்லை, ஆனால் அந்த நபர் என் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரை காயப்படுத்தியிருந்தால் என்ன செய்வது" என பதிவிட்டிருந்தார்.

அவர் பகிர்ந்த அந்த வீடியோ அடங்கிய அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வைரலாகி பரவி வருகிறது. இருப்பினும், இந்த சம்பவம் குறித்த சரியான தேதி மற்றும் இடம் தெளிவாகத் தெரியவில்லை.

இந்த சம்பவம்  பதிவாகி வீட்டு உரிமையாளர் பகிர்ந்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இருப்பினும், சம்பவத்தின் சரியான தேதி மற்றும் இடம் தெளிவாகத் தெரியவில்லை.

Tags :
Advertisement