For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

ஜாதி - மத கலவரம்.. துப்பாக்கி சூடு... தமிழகத்தில் இல்லை.! டிஜிபி சைலேந்திர பாபு பெருமிதம்.!

07:39 AM Mar 20, 2023 IST | மணிகண்டன்
ஜாதி   மத கலவரம்   துப்பாக்கி சூடு    தமிழகத்தில் இல்லை   டிஜிபி சைலேந்திர பாபு பெருமிதம்
Advertisement

கடந்த 2 ஆண்டுகளாக தமிழக்தில் ஜாதி கலவரம், மத கலவரம், துப்பாக்கி சூடு ஆகியவை இல்லை. - டிஜிபி சைலேந்திர பாபு. 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே , ராஜபாளையம் பகுதி பட்டாலியன் பகுதிக்கு ஆய்வு செய்ய டிஜிபு சைலேந்திர பாபு , அங்கு புதியதாக அமைக்கப்பட்ட பூங்காவை திறந்து வைத்தார்.

48 உயிரிழப்புகள் :

பின்னர் பேசிய அவர், கடந்த 1995-1996 காலகட்டத்தில் இந்த ராஜபாளையம் பகுதியில் ஜாதி கலவரங்கள் நடந்தன. அப்போது 48 உயிரழப்புகள் ஏற்பட்டன. ஆனால் இப்போது அது மாதிரியான நிலை இல்லை. கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாடு காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் என தெரிவித்தார்.

தமிழக காவல்துறை முதலிடம் :

மேலும், புலன் விசாரணையில் தமிழக காவல் துறை முதலிடத்தில் உள்ளது. மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற காவலர் பணித்திறன் தேர்வில், 11 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது தமிழக காவல்துறை என பெருமையாக பேசினார்.

பொன்விழா ஆண்டு :

கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழக காவல்துறையில் மகளிர் சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. இதனை  போன் விழா ஆண்டாக கொண்டாடி வருவதாகவும் டிஜிபி சைலேந்திர பாபு குறிப்பிட்டார்.

Advertisement