For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

தங்கலான் - கங்குவா படத்திற்கு வந்த சிக்கல்?

03:29 PM Feb 15, 2024 IST | பால முருகன்
தங்கலான்   கங்குவா படத்திற்கு வந்த சிக்கல்
kanguva Thangalaan [file image]
Advertisement

தமிழ் சினிமாவில் அடுத்ததாக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படங்களில் சூர்யா நடித்து வரும் கங்குவா மற்றும் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் ஆகிய படங்கள் இருக்கிறது என்று கூறலாம். இந்த இரண்டு படங்களையும் ஞானவேல் ராஜா தான் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஏற்கனவே முடிந்துவிட்டது. இதில் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பிறகு சில காரணங்களால் அதை தள்ளிப்போட்டுபடம் ஏப்ரலில் வெளியிடுவதாக இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் அறிவித்தனர். இன்னும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை அதைப்போலவே, சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் 'கங்குவா'. படத்தின் ரிலீஸ் தேதியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

வடிவேலுக்கு புடிச்சா தான் வாய்ப்பு! ஆர்த்தி போட்டுடைத்த உண்மை!

இந்த திரைப்படத்தில் 3D சம்மந்தப்பட்ட வேலைகள் மற்றும் CG வேலைகள் நிறைய இருக்கிறது என்பதால் அதுவே முடிய இன்னும் சில மாதங்கள் ஆகுமாம். அதனால்தான் ரிலீஸ் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை. சூர்யாவின் பாகம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. பாபி டெவோலின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.

கங்குவா படம் தாமதமானால், கிராபிக்ஸ் பணிகள் காரணமாக தங்கலான் படம் தாமதமாகும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நிதி பிரச்சனையால் இந்த இரண்டு படங்கள் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறதாம். இந்த செய்திதான் தற்போது கோலிவுட்டில் பரபரப்பு செய்தியாக பேசப்பட்டது வருகிறது. இப்படியான தகவல் வெளியாக  முக்கிய காரணமே இரண்டு படங்களின் ரிலீஸ் தேதி பற்றி அறிவிப்பு வெளியாகாதது தான். எனவே, இந்த தகவல் உண்மையான தகவலா அல்லது வதந்தியா என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags :
Advertisement