For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

இதுதான் சரியான நேரம்....அதிரடியாக சரிந்த தங்கம் விலை.! இன்றைய நிலவரம்...

11:57 AM Feb 14, 2024 IST | கெளதம்
இதுதான் சரியான நேரம்    அதிரடியாக சரிந்த தங்கம் விலை   இன்றைய நிலவரம்
gold price [File Image]
Advertisement

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 சரிந்து விற்பனை செய்யப்படுகிறது.

சரவதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, ​​தங்கத்தின் விலையும் உயர்கிறது. இவ்வாறு தினமும் ஏற்றம், இறக்கும் காணப்படும் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம்.

கடந்த வாரம் ரூ.47 ஆயிரத்திற்கு மேல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை மெல்ல மெல்ல குறைந்து வந்த நிலையில், இன்று அதிரடியாக ரூ.480 குறைந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த மாதம் சுப முகூர்த்தம் என்பதால், தங்கம் வாங்கும் குடும்பங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

சென்னையில் (14. 02. 2024) இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.46,000க்கும், கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.5,750க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 குறைந்து ரூ.75.50 எனவும் ஒரு கிலோ வெள்ளி ரூ.75,500க்கும் விற்பனையாகிறது.

சட்டப்பேரவையில் 2 தனித் தீர்மானங்களை தாக்கல் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

சென்னையில் (13. 02. 2024) நேற்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,810க்கு விற்பனையானது. நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.46,640க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.160 குறைந்து ரூ.46,480க்கு விற்பனையானது. மேலும், வெள்ளி விலை 50 காசுகள் உயர்நது கிராமுக்கு ரூ.77-க்கும், கிலோவுக்கு ரூ.77,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement