For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

#INDvsENG : நாளை தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டி..!

09:37 PM Feb 01, 2024 IST | Ahil
 indvseng   நாளை தொடங்கும் 2 வது டெஸ்ட் போட்டி
Advertisement

இந்தியாவிற்கு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு  5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.  முதல் போட்டி கடந்த  25-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இப்போட்டியில், இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதை தொடர்ந்து நாளை 2 ம் தேதி, இத்தொடரின் 2 வது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இதனால் இந்திய வீரர்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கிலாந்துக்கு எதிராக நாளை நடைபெறவுள்ள இந்த 2 வது டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி  விளையாடமாட்டார் என பிசிசிஐ அறிவித்திருந்து.

கே.எல் ராகுல் & ஜடேஜா 2-வது டெஸ்டில் இருந்து விலகல்- பிசிசிஐ அறிவிப்பு..!

அதன் பின் முதல் ஆட்டம் முடிந்த பிறகு ரவீந்திர ஜடேஜாவும், கே எல் ராகுல் காயங்கள் காரணமாக இருவரும் இந்த 2 வது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார்கள் என பிசிசிஐ கூறியது. தற்போது ஜடேஜா மேலும் ஒரு போட்டியிலும்  விளையாடமாட்டார் எனவும் தகவல் கசிந்து உள்ளது. இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் நாளை விசாகப்பட்டினத்தில் நடக்க விருக்கும் 2 வது டெஸ்ட் போட்டியில் யார் யார் விளையாட போகிறார்கள் என்பது நாளை தெரிய வரும். இருக்கின்ற வீரர்களை நாளை கேப்டன் ரோஹித் சர்மா எப்படி  உபயோகிப்பார் என்பது ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. நாளை 9.30 மணிக்கு இந்தியா, இங்கிலாந்து இடையேயான இரண்டாம் போட்டி தொடங்கும்.

 சாத்தியமான இந்திய லெவன் அணி :

ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், ரஜத் படிதார், அக்சர் படேல், கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர்.

  சாத்தியமான இங்கிலாந்து லெவன்அணி :

சாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லி, சோயிப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

Tags :
Advertisement