HomeTop Storiesஇந்தியா தமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமா லைஃப்ஸ்டைல்தொழில்நுட்பம்ஆன்மீகம்
Advertisement

Raayan: இன்னும் யாரெல்லாம் இருக்காங்க? மிரட்டும் தனுஷின் 'ராயன்' காஸ்ட்.!

02:20 PM Feb 26, 2024 IST | கெளதம்
Cast of Raayan [File Image]
Advertisement

நடிகர் தனுஷ் எழுதி இயக்கி வரும் 50வது படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு 'ராயன்' என்று சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அன்றைய தினத்தில் இருந்து அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியான வண்ணம் உள்ளது. ராயன் படத்தை சன் பிக்சர்ஸ் பேனரின் கீழ், கலாநிதி மாறன் தயாரிக்க, இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

Advertisement

READ MORE - வயசானாலும் நான் வேற ரகம்! வீடியோவை இறக்கிவிட்ட ‘இடுப்பழகி’ சிம்ரன்!

இதுவரை, இந்த படத்தில் யார்யார் நடிக்கிறார்கள் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடிக்கிறார்கள். இதை பார்க்கும் பொழுது, படம் சும்மா மிரட்டலாக தயாராகி வருகிறது போல் தெரிகிறது.

READ MORE - Kenneth Mitchell : ‘கேப்டன் மார்வெல்’ பட நடிகர் கென்னத் மிட்செல் காலமானார்.!

இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்து உள்ளது என்றே சொல்ல வேண்டும். அதற்கு காரணம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள நடிகர்களின் லிஸ்ட் அப்படி உள்ளது. முதலில் போஸ்டர் அறிவிக்கும் பொழுது, சந்தீப் கிசன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியருடன் இருக்கும் தனுஷின் மிரட்டலான போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை உண்டாக்கியது.

READ MORE - உறவு தொடரல…’அதான் வாய்ப்பு கொடுக்கல’…மணிரத்னம் பற்றி மது!!

இதனையடுத்து வரிசையாக இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் அப்டேட் குவிந்து வருகிறது அதில், நடிகர் எஸ்.ஜே.சூர்யா குறித்து சொல்லவே  தேவையில்லை. அதுபோல், நடிகர் பிரகாஷ் அதற்கு அடுத்தபடியாக செல்வராகவன் இருக்கிறார், இவ்வாறு பார்த்து பார்த்து படக்குழு நடிகர்களை செலக்ட் செய்துள்ளது போல் தெரிகிறது. இந்நிலையில், இன்னும் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Cast of Raayan [Photo from @NammaTrend]
படத்திற்கான படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷ்ன் வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
காளிதாஸ் ஜெயராம்ராயன்தனுஷ்Dhanushkalidas jayaramRaayanRaayan Cast
Advertisement