For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

அமெரிக்காவை தாக்கிய வெள்ளம்...2 பேர் பலி.. நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்!!

11:01 AM Jun 26, 2024 IST | பால முருகன்
அமெரிக்காவை தாக்கிய வெள்ளம்   2 பேர் பலி   நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்
flooding us [file image]
Advertisement

அமெரிக்கா :  வட-மத்திய அமெரிக்காவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் மீட்கப்பட்ட நிலையில், குறைந்தது 2 பேர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அயோவாவில் ஒருவரும், தெற்கு டகோட்டாவில் ஒருவரும் இறந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும், இவர்களுடைய உடல்களை மீட்க முடியவில்லை என மீட்பு துறையினர் தகவலை தெரிவித்துள்ளனர்.

கிழக்கு நெப்ராஸ்கா மற்றும் தெற்கு டகோட்டாவிலிருந்து அயோவா மற்றும் மினசோட்டா வரையிலான பகுதியில், கடந்த வாரம் முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக மழையால் கிழக்கு நெப்ராஸ்கா மற்றும் தெற்கு டகோட்டா ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது, இந்த இடங்களின் சில பகுதிகளில் 46 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இதில், வீடுகள் சேதமடைந்தன, சில சாலைகள் மூடப்பட்டன என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் அயோவா மாகாணத்தின் வடமேற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை வெள்ளம் கரைகளை உடைத்த காரணத்தால் அப்பகுதியில் இருந்த மக்கள் நுற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.  செவ்வாய்க்கிழமை காலை கடுமையான இடியுடன் கூடிய மழை காரணமாக அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் 150,000க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டன.

வெள்ள அபாய எச்சரிக்கை இந்த வாரத்தில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வெள்ளம் ஏற்பட்டதை தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் திங்களன்று அயோவா மாநிலத்தில் ஒரு பெரிய பேரழிவு இருப்பதாக அறிவித்தார் மற்றும் கடுமையான புயல்கள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநில, பழங்குடி மற்றும் உள்ளூர் மீட்பு முயற்சிககளை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டார்.

Tags :
Advertisement