For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

அந்த காரியத்தால் அஜித்தை சுத்தமா பிடிக்காது! விளாசி தள்ளிய பிரபல நடிகர்!

06:53 PM Mar 18, 2024 IST | பால முருகன்
அந்த காரியத்தால் அஜித்தை சுத்தமா பிடிக்காது  விளாசி தள்ளிய பிரபல நடிகர்
ajith sad [file image]
Advertisement

Ajith Kumar நடிகர் அஜித்குமாரை பல பிரபலங்களும் பாராட்டி பேசி தான் பார்த்திருப்போம். ஆனாலும், ஒரு சில பிரபலங்கள் அஜித் செய்த விஷயங்களை வைத்து அவரை பற்றி விமர்சித்து பேசுவதும் உண்டு. குறிப்பாக வேட்டையாடு விளையாடு படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அஜித் தன்னிடம் கடன் வாங்கியதாகவும் அந்த கடனை இன்னும் திரும்பி கூட கொடுக்கவில்லை என விமர்சித்து பேசி இருந்தார்.

read more- கமல்ஹாசனை பார்த்தாலே நடுங்கும் பிரபல நடிகை! அப்படி என்ன செஞ்சிட்டாரு உலகநாயகன்?

அவரை தொடர்ந்து வடிவேலுடன் பல படங்களில் ஒன்றாக நடித்த பிரபல நடிகரான டெலிபோன் ராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் பற்றி பேசியுள்ளார். பேட்டியில் பேசிய அவர் " நான் அஜித்துடன் அட்டகாசம் என்று ஒரு படம் செய்தேன். அந்த படத்தில் இருந்தே எனக்கு அஜித்தை பிடிக்கவே பிடிக்காது. அதற்கு காரணம் இருக்கிறது. அந்த காரணத்துக்காக தான் அவரை எனக்கு பிடிக்காது.

read more - கேரளாவும் என்னோட கோட்டை தான்! கெத்து காட்டும் தளபதி விஜய்!

அது என்ன காரணம் என்றால் ஒரு முறை ஒரு படத்தின் படப்பிடிப்பு ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்று கொண்டு இருந்தது. அந்த சமயம் நான் ரோஜா மேடம் ரமேஷ் கண்ணன் சார் அனைவரும் அஜித்தை பார்த்துவிட்டு அவருடன் புகைப்படம் எடுக்கலாம் என்று சென்று இருந்தோம். ஆனால், புகைப்படம் எடுக்க முடியாது என்று கூறிவிட்டு காரில் ஏறி ஓடிவிட்டார்.

read more- கதறி அழுது கால்ஷீட் கேட்ட அறிமுக இயக்குனர்? பீக்கில் இருந்தபோதே யோசிக்காமல் கொடுத்த சரத்குமார்!

நாங்கள் எல்லாம் சினிமா துறையில் இருப்பவர்கள் எங்களுக்கே இந்த மாதிரி என்றால் எப்படி இருக்கும்? நான் பல சீரியல்களில் நடித்து இருக்கிறேன் அது அனைத்தையும் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தான் தயாரித்து இருந்தார். அவரிடமே அஜித் பணம் வாங்கிவிட்டு இன்னும் கொடுக்கவில்லை. அஜித்துக்காக வேலை செய்ய சோஷியல் மீடியாவில் வேலை செய்ய பெரிய கூட்டமே இருக்கிறது.

read more- அஜித் மனுஷனே இல்லை! பரபரப்பை கிளப்பிய பிரபல தயாரிப்பாளர்!

அந்த கூட்டம் என்ன செய்யும் என்றால் அஜித்தை நல்லவர் நல்லவர் என்று காட்டும். இந்த கூட்டத்தை அஜித் தான் வைத்து இருக்கிறார்" எனவும் நடிகர் டெலிபோன் ராஜ் விமர்சித்து பேசியுள்ளார். இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் சற்று கடுப்புடன் சும்மா பேசணும் என்று பேசாதீங்க என்று கூறி வருகிறார்கள்.

Tags :
Advertisement