HomeTop Storiesஇந்தியா தமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமா லைஃப்ஸ்டைல்தொழில்நுட்பம்ஆன்மீகம்
Advertisement

சூரி தான் இல்லை..ஆனா நகைச்சுவை நிறைய இருக்கு! 'தேசிங்கு ராஜா 2' குறித்து இயக்குனர்!

11:42 AM Jun 18, 2024 IST | பால முருகன்
desingu raja 2 [file image]
Advertisement

தேசிங்கு ராஜா 2 : சூரி தேசிங்கு ராஜா படத்தின் இரண்டாவது பாகத்தில் இருக்கமாட்டார் எனவும், ஆனால், காமெடிக்கு பஞ்சமே இருக்காது எனவும் படத்தை இயக்கும் என படத்தினை இயக்கி வரும் இயக்குனர் எழில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தேசிங்கு ராஜா படத்தின் முதல் பாகத்தில் எந்த அளவுக்கு காமெடி காட்சிகள் இருந்தது என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம்.

Advertisement

முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ஹிட் ஆகி இருக்கும் நிலையில், அடுத்ததாக படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்குனர் எழில்  இயக்கி வருகிறார். விமல், பூஜிதா, பொன்னடா, லொள்ளு சபா சுவாமிநாதன், சிங்கம் புலி, ஷாம்ஸ் புகழ், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இதற்கிடையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இயக்குனர் எழில்  தேசிங்கு ராஜா  2 குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய இயக்குனர் எழில் " தேசிங்கு ராஜா படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாவது பாகத்தில் அதிகமான நகைச்சுவை காட்சிகள் இருக்கும். இந்த படம் முதல் பாகத்தினுடைய தொடர்ச்சியாக இல்லாததால் இந்த பகுதியில் சூரி இருக்க மாட்டார்.

நகர பின்னணியில் அமைக்கப்பட்டு நேற்று படப்பிடிப்பு நிறைவடைந்தது மூன்று நண்பர்கள், இரண்டு இளைஞர்கள் மற்றும் ஒரு பெண் கல்லூரியில் ஒன்றாகப் படித்துவிட்டு பிரிந்து செல்லும் கதை இது.நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் சந்திக்கும் போது, ​​அந்த பெண் போலீஸ் அதிகாரியாகவும், நண்பர் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், மற்ற நண்பர் ரவுடியாகவும் இருப்பார்கள்" என படம் பற்றி இயக்குனர் எழில் தெரிவித்துள்ளார்.

Tags :
Desingu RajaDesingu Raja 2ezhilSoori
Advertisement