For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

வாரத்தின் முதல் நாளில் ஏற்றமடைந்த சென்செக்ஸ்..! 65,060 புள்ளிகளாக வர்த்தகம்.!

11:34 AM Aug 28, 2023 IST | செந்தில்குமார்
வாரத்தின் முதல் நாளில் ஏற்றமடைந்த சென்செக்ஸ்    65 060 புள்ளிகளாக வர்த்தகம்
Sensex Rise [Image source : Moneycontrol]
Advertisement

வாரத்தின் முதல் நாளான இன்று 64,908 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கிய மும்பை சென்செக்ஸ் தற்போதைய நிலவரப்படி, 174.03 புள்ளிகள் உயர்ந்து 65,060 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 54.55 புள்ளிகள் உயர்ந்து 19,320.35 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 64,886 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,265 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.

முந்தைய வாரங்களில் சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement