For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

சரிவில் முடிந்த சென்செக்ஸ், நிப்ஃடி புள்ளிகள்!!

06:13 PM Jun 21, 2024 IST | அகில் R
சரிவில் முடிந்த சென்செக்ஸ்  நிப்ஃடி புள்ளிகள்
Indian Share Market [file image]
Advertisement

பங்குச்சந்தை: தேசிய பங்குச்சந்தைகளான, இந்திய பங்குச்சந்தை குறியீடான நிப்ஃடியும் (NSE) மற்றும் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ்ஸும்  (BSE)  இன்றைய வர்த்தக நாளின் தொடக்கத்தில் ஏற்றத்துடனே தொடங்கியது.

அதில், சென்செக்ஸ் (BSE) 329 புள்ளிகள் அதிகரித்து 77,808 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வந்தது. அதே போல நிப்ஃடி (NSE) 100 புள்ளிகள் அதிகரித்து 23,667 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கியது.

இன்று முழுவதும் ஏற்றம் இறக்கம் கண்டு வந்த இரண்டும் தற்போது சரிவினை சந்தித்து நிறைவு பெற்றுள்ளது. அதில், மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 269.03 சரிந்து 77,209.90 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

அதே நேரம் இந்திய பங்கு சந்தை நிப்ஃடி 65.90 புள்ளிகள் சரிந்து 23,501.10 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. வர்த்தகம் இடையே சென்செக்ஸ் 77,808 புள்ளிகளை தொட்டு, பின் 676 புள்ளிகள் சரிந்து 76,802 புள்ளிகளானது என்பது குறிப்பிடத்தக்கது.

முதலீட்டாளர்கள் லாபத்தை எடுத்ததும், வடமாநிலங்களில் பெய்து வரும் பருவமழை குறைவாக பெய்துள்ளதால் பங்கு விலைகள் குறையக் காரணம் என கருத்துக்கள் எழுந்துள்ளது.

மேலும், சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20 நிறுவனங்களின் பங்குகளின் விலை குறைந்து வர்த்தகமாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement