For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

மகள் திருமண விழா: "ரவுடி பேபி" பாடலுக்கு நடனமாடிய சரத்குமார் மற்றும் ராதிகா.!

04:20 PM Jul 02, 2024 IST | கெளதம்
மகள் திருமண விழா   ரவுடி பேபி  பாடலுக்கு நடனமாடிய சரத்குமார் மற்றும் ராதிகா
varalakshmi [file image]
Advertisement

வரலட்சுமி சரத்குமார் : நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமிக்கும் நிக்கோலாய் சச்தேவ் என்பவருக்கும் இன்று (ஜூலை 2ஆம் தேதி) சென்னையில் திருமணம் நடைபெறவுள்ளது. வரலக்ஷ்மி சரத்குமாரின் திருமணத்திற்கு முந்தைய விழாவில் பார்ட்டியை அதிர வைத்த ராதிகா சரத்குமார் தான்.

ஆம், நடிகை வரலட்சுமியின் திருமணத்தை முன்னிட்டு மெஹந்தி மற்றும் சங்கீத் நிகழ்ச்சிகள் சென்னையில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகின்றன. அந்த விழாவின் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதில், ‘மெஹந்தி’ நிகழ்ச்சியில் சரத்குமார் மற்றும் ராதிகா ஆகியோர் ‘ரவுடி பேபி’ பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளனர். அது தொடர்பான வீடியோக்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. மேலும், நடிகை த்ரிஷா நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, வரலட்சுமிக்கு முத்தம் கொடுத்த புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

வரலட்சுமியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் குடும்பத்தார் மட்டுமின்றி த்ரிஷா, அர்ச்சனா கல்பாத்தி, கீர்த்தி, அனிதா விஜயகுமார் மற்றும் பல சினிமா நட்சத்திரங்களும் நிக்கோலாய் சச்தேவ் உள்ளிட்ட திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

Tags :
Advertisement