For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

நீ தான்பா சரியான ஆளு! பயோபிக் எடுக்க 'ஆக்சன்' இயக்குனரை தேர்வு செய்த இளையராஜா?

09:00 AM Feb 27, 2024 IST | பால முருகன்
நீ தான்பா சரியான ஆளு  பயோபிக் எடுக்க  ஆக்சன்  இயக்குனரை தேர்வு செய்த இளையராஜா
ilayaraja [File Image]
Advertisement

பிரபல இசையமைப்பாளரான இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி  கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார் என்றும் இந்த திரைப்படத்தினை பிரபல பாலிவுட் இயக்குனரான பல்கி இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

Read more- தாங்க முடியல! தனுஷ் பட பிடிப்பில் கண்ணீர் விடும் பிரபலங்கள்! அப்போ ரசிகர்களின் நிலைமை?

அதனைத் தொடர்ந்து சில காரணங்களால் படத்தில் இருந்து பால்கி தூக்கப்பட்டு அவருக்கு பதிலாக இரண்டு தமிழ் இயக்குனர்களான அருள் மாதேஸ்வரன் மற்றும் மாரி செல்வராஜ் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது . அது மட்டுமின்றி  இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை தனுஷை தயாரித்து நடிப்பதாகவும் கூறப்பட்டது.

Read more- துணிவு vs வாரிசை தொடர்ந்து மீண்டும் மோதும் அஜித் – விஜய்…களைகட்ட போகும் திரையரங்கம்.!

இந்த நிலையில் தற்போது தன்னுடைய பயோபிக் படத்தை எடுக்க இயக்குனரை தேர்வு செய்துவிட்டாராம் இளையராஜா. அதன்படி அருண் மாதேஸ்வரன் தான் கிட்டத்தட்ட இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை இயக்க உள்ளாராம்.எனவே தன்னுடைய படத்தை இயக்க வேண்டும் என்றால் தன்னிடம் சில நாட்கள் இருந்து தன்னைப் பற்றிய வரலாற்று கதையை மெல்ல மெல்ல கூறுவது தான் சரியாக இருக்கும் என்று இளையராஜா அருண் மாதேஸ்வரனை நேரில் அழைத்து பக்கத்தில் வைத்திருக்கிறாராம்.

Read more- வலிமையை போல் வாடும் விடாமுயற்சி.! நூதன முறையில் இறங்கிய அஜித் ரசிகர்கள்.!

விரைவில் இளையராஜா கதைகளை முழுவதும் சொல்லி முடித்த பிறகு ஒரு படத்தை இயக்குவதற்கான கதையை ரெடி செய்து இளையராஜா மற்றும் தனுஷிடம்  அருண் மாதேஸ்வரண் கூறுவார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவலை வலைப்பேச்சு தெரிவித்துள்ளது. விரைவில் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரும் எனவும் கூறப்டுகிறது.

Tags :
Advertisement