For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

கம்மி விலையில் 14 ஓடிடிகள்.! புதிய திட்டத்தை அறிவித்து அதிரவிட்ட ஜியோ.!

06:50 PM Dec 15, 2023 IST | செந்தில்குமார்
கம்மி விலையில் 14 ஓடிடிகள்   புதிய திட்டத்தை அறிவித்து அதிரவிட்ட ஜியோ
JioTV [File Image]
Advertisement

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஜியோ, தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு புதிய ஜியோடிவி பிரீமியம் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்கள் மூலம் பயனர்கள் ஒரே இடத்தில் பல ஓடிடி (OTT) சேவைகளை அணுக முடியும்.

இந்தத் திட்டங்களின் மூலம், இனி ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் தனித்தனி சந்தாக்களை நீங்கள் வாங்க வேண்டியதில்லை. ஜியோ பயனர்கள் தங்களுக்குப் பிடித்த திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் மற்றும் செய்திகளைத் தங்களின் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், மடிக்கணினிகள் மற்றும் ஸ்மார்ட் டிவிகளில் பார்க்க முடியும்.

16ஜிபி ரேம்..50எம்பி கேமரா..5,000mAh பேட்டரி.! உலக அளவில் அறிமுகமானது விவோ X100, X100 Pro.!

ஜியோ அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய பிரீமியம் சந்தாத் திட்டங்கள் மாதாந்திர, காலாண்டு மற்றும் வருடாந்திர திட்டங்களுடன் அன்லிமிடெட் கால், தினசரி டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் 12 முதல் 14 முன்னணி ஓடிடி சேவைகளை வழங்குகிறது. இதில் நெட்ஃபிலிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமா ஆகியவை அடங்கும்.

கூடவே Lionsgate Play, Docubay, Hoichoi, Planet Marathi, Chaupal, EpicON போன்ற ஓடிடி சேவைகளும் உள்ளது. புதிய பிரீமியம் திட்டங்கள் ரூ.398 முதல் தொடங்கி, ரூ.1,198 மற்றும் ரூ.4498 விலையில் மொத்தமாக மூன்று புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் வருகின்றன. இவை அனைத்தும் டிசம்பர் 15 முதல் கிடைக்கும்.

ரூ.398 திட்டம்

இந்த திட்டம் குறைந்த விலையில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால், 100 எஸ்எம்எஸ் மற்றும் 12 ஓடிடி சேவைகள் கொண்ட ஜியோடிவி பிரீமியம் போன்றவற்றுடன் வருகிறது. இதற்கு 28 நாட்கள் வேலிடிட்டி உள்ளது.

ரூ.1,198 திட்டம்

இது ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால், 100 எஸ்எம்எஸ் மற்றும் 14 ஓடிடி சேவைகள் கொண்ட ஜியோடிவி பிரீமியம் போன்றவற்றுடன் வருகிறது. இதற்கு 84 நாட்கள் வேலிடிட்டி உள்ளது.

சாம்சங் போன் பயனர்களே கவனம்.! இந்திய அரசு எச்சரிக்கை.!

ரூ.4,498 திட்டம்

இதில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால், 100 எஸ்எம்எஸ் மற்றும் 14 ஓடிடி சேவைகள் கொண்ட ஜியோடிவி பிரீமியம் போன்றவை உள்ளது. இத்திட்டத்திற்கு 365 நாட்கள் வேலிடிட்டி உள்ளது.

இதில் சேர என்ன செய்ய வேண்டும்.?

  • இந்த திட்டங்களில் சேர, பயனர்கள் முதலில் ஜியோடிவி செயலியை டவுன்லோட் செய்ய வேண்டும்.
  • பிறகு தங்கள் ஜியோ எண்ணை பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.
  • அதன் பிறகு, ஜியோடிவி பிரீமியம் பிரிவைத் தேர்வு செய்ய வேண்டும்
  • அதில் தங்களுக்கு விருப்பமான திட்டத்தை தேர்ந்தெடுத்து, அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
  • முடிவில்  உங்களால் அந்த திட்டத்திற்கான சேவைகளை அணுக முடியும்.
Tags :
Advertisement