For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

ராத்திரி வேளையில் அடர்ந்த காட்டுக்குள் ராஷ்மிகா.. கட்டுக்கட்டாக பணம் எடுத்த காட்சி.!

01:58 PM Jul 05, 2024 IST | கெளதம்
ராத்திரி வேளையில் அடர்ந்த காட்டுக்குள் ராஷ்மிகா   கட்டுக்கட்டாக பணம் எடுத்த காட்சி
RashmikaMandanna - Kubera [File image]
Advertisement

குபேரா : இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், நாகார்ஜுனா இணைந்து நடிக்கும் 'குபேரா' படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மந்தனாவின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

மேலும், அவரது பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு வலு சேர்க்கும் வகையில், ராஷ்மிகா இடம்பெற்றிருக்கும் சிறிய கிளிம்ப்ஸ் வீடியோவையும் அப்படக்குழு வெளியிட்டுள்ளது.  அந்த வீடியோவில், நட்ட நடு ராத்திரி வேளையில் தனிமையாக ஒரு அடர்ந்த காட்டுக்குள் கையில் கடப்பாறை உடன்  வருவது போலவும், அண்ட் கடப்பாறை வைத்து மண்ணை தோண்டுவது போலவும் கட்சிகள் அமைந்துள்ளது.

பின்னர், அந்த மண்ணை தோண்டிய பின் குழிக்குள் இருந்து ஒரு பெறிய பெட்டியை தொறக்கிறார். அதில், கட்டுக்கட்டாக பணம் இருக்கிறது, அதனை எடுத்துக்கொண்டு வெற்றியின் புன்னைகையுடன் செல்கிறார்.

தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியுள்ள இப்படத்தில் ரஷ்மிகா, ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த 48 நொடிகள் வீடியோ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement