For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்! ரஜினிகாந்த் எமோஷனல்!

09:54 AM Feb 09, 2024 IST | பால முருகன்
என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்  ரஜினிகாந்த் எமோஷனல்
LalSalaam [File Image]
Advertisement

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், நிரோஷா, தம்பி ராமையா, கபில்தேவ், உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லால் சலாம். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகளுக்காக சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் என அனைத்தும் வெளியாகி மக்களுக்கு மத்தியில் படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது என்றே கூறலாம்.

இந்நிலையில் இந்த திரைப்படம்  பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் எதிர்பார்த்த அளவிற்கு இருப்பதன் காரணமாக படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. விமர்சனங்களை வைத்து பார்க்கையில்  கண்டிப்பாக படம் பெரிய வெற்றியை பெரும் என தெரிகிறது.

லால் சலாம்: 45 நிமிட கேமியோ ரோலுக்கு ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் இவ்வளவா?

இதனையடுத்து, இன்று படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் நிலையில். படம் வெற்றி அடைய தனது மகள் ஐஸ்வர்யா உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியீட்டு ரஜினிகாந்த் சற்று எமோஷனலாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து ரஜினிகாந்த் கூறியதாவது " என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்.உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என கூறியுள்ளார்.

Tags :
Advertisement