For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

கமல் தடுக்காவிட்டால் சாமியாராக செல்ல துணிந்த ரஜினி.! நடந்தது என்ன?

05:01 PM Mar 18, 2024 IST | கெளதம்
கமல் தடுக்காவிட்டால் சாமியாராக செல்ல துணிந்த ரஜினி   நடந்தது என்ன
kamal and rajini [File Image]
Advertisement

Kamal - Rajini: தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் கமல்ஹாசன் இடையேயான நட்பை பற்றி சொல்ல தேவையில்லை. நீண்ட நாட்களாக இருவரும் இணைபிரியா நல்ல நண்பர்கள், சினிமாவை தாண்டி ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இடையே அப்படி ஒரு சிறந்த நட்பு உண்டு. சமீபத்தில், இருவரும் 'தலைவர் 170' மற்றும் 'இந்தியன் 2' படங்களின் படப்பிடிப்பின் போது சந்தித்தனர்.

READ MORE - நாடோடிகள் படத்திற்கு விழுந்த அடி! இன்னும் கடன் கட்டும் சமுத்திரக்கனி!

ஆனால், என்னதான் நண்பர்களாக இருந்தாலும் சினிமாவில் போட்டி இல்லாமல் வெற்றி பெற்ற நடிகர்கள் இல்லை. அது போல் சினிமாவில் இவர்கள் இருவருக்கும் போட்டி உண்டு, முந்தைய காலகட்டத்தில் ரஜினி - கமல் இடையே போட்டி நிகழ்வதும் அவரது ரசிகர்கள் போட்டி போட்டு சண்டையிடுவதும் உண்டு. எடுத்துக்காட்டாக இப்பொழுது விஜய் - அஜித் ரசிகர்கள் இருப்பது போல் இருப்பர்.

READ MORE - பாலிவுட் சினிமாவை கைக்குள் போட்ட அட்லீ.! அம்பானி வீட்டில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

இப்படி இருக்கையில், ஒரு கட்டத்தில் இருவரும் ஒரு பீக்கில் இருந்து கொண்டிருக்கும் பொழுது, கமலின் பிறந்த நாள் விழா மேடையில், ரஜினியும் அமர்ந்திருக்கிறார். கமல் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது, ரஜினியை கையை காட்டி இந்த மனுஷன் என்னடானா சினிமாவை விட்டு போறதாக சொல்கிறார், ஐயா உங்களை வைத்து நான். என்னை வைத்து நீங்கள் என வெளிப்படையாக பேசினாராம்.

READ MORE - நான் சிகரெட் பிடிச்சிட்டு இருந்தேன்..! ‘தனுஷ் பயங்கர டென்ஷன்’ ஆயிட்டாரு – ராஜ்கிரண்! 

அதாவது, கமலிடம் சினிமாவை விட்டு விலகுவதாக ரஜினி முன்னதாக தெரிவித்ததாகவும், அதனை மேடையில் போட்டுடைத்து அதெல்லாம் செய்யாதீங்க என்று கூறியதாக கமல் தனது பிறந்தநாள் விழா மேடையில் அனைவரது முன்னிலையில் தெரிவித்துக்கொண்டார். அப்போது கமல் தடுக்காவிட்டால் சாமியாராக சென்றிருப்பார்.

அப்போது தடுத்ததால்தான் ரஜினி 17o, 171வது படங்கள் என நடித்துக்கொண்டிருக்கிறார் என சினிமா விமர்சகர் செய்யாறு பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிந்துகொண்டார். மேலும், அதில் விஜய் தற்பொழுது சினிமாவை விட்டு சென்றால் அஜித்துக்கு போட்டி வேண்டும் என்று கூறினார். விஜய் சென்றவதை வைத்து சிவகார்த்திகேயன் தனது பாதையை சரியாக பயன்படுத்துவதாக தெரிவித்துக்கொண்டார்.

Tags :
Advertisement