For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் - தாமதத்திற்கு அதுதான் காரணம் : அமைச்சர் கே.என்.நேரு

04:42 PM Sep 30, 2023 IST | லீனா
மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள்   தாமதத்திற்கு அதுதான் காரணம்    அமைச்சர் கே என் நேரு
knnehru [Imagesource : Representative]
Advertisement

தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழை பெய்து வரும் நிலையில், மக்களை காக்கும் வண்ணம் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மழைநீர் வடிகால் பணிகள் சென்னையில் நடைபெற்று வந்த நிலையில், செப்.30க்குள் பணிகள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பணிகள் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.என்.நேரு மழைநீர் வடிகால் பணிகள் சென்னையில் செப்.30க்குள் பணிகள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சென்னையில் கடந்த 50 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பணிகள் முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இன்னும் 5 முதல் 6 நாட்களுக்குள் பணிகள் முடிவடைந்துவிடும். மழை வெல்ல பாதிப்புக்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எவ்வளவு பெரிய மழை வந்தாலும், அது மக்களை பாதிக்காத அளவுக்கு பணிகள் மேகொள்ளப்பட்டுள்ளது.

சாலை பணிகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டு, டெண்டர் விடப்ப்பட்டுள்ளது. ஆனால், மழையின் காரணமாக பணிகள் மேற்கொள்வதில் சற்று சிரமம் காணப்படுகிறது. அவையும் விரைந்து சரிசெய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

Advertisement