For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

#U19WC2024 : நியூஸிலாந்து அணியை எளிதில் வென்றது பாகிஸ்தான்..!

09:23 PM Jan 27, 2024 IST | Ahil
 u19wc2024   நியூஸிலாந்து அணியை எளிதில் வென்றது பாகிஸ்தான்
Advertisement

தென் ஆப்பிரிக்காவில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் 22 வது போட்டியாக இன்று பாகிஸ்தான் அணிக்கும், நியூஸிலாந்து அணிக்கும் இடையே போட்டி நடை பெற்றது. டாஸ் வென்ற  நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதனால் பாகிஸ்தான் அணி பந்து வீச நேர்ந்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய நியூஸிலாந்து அணியின் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து  மிக மோசமான ஆட்டத்தை  வெளிப்படுத்தினர். நியூஸிலாந்து அணி வீரரான ஸ்டாக்போல் மட்டும் நிதானமாக விளையாடினார். ஆனால் அவரும் 42 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் அந்த அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 38 ஓவருக்கு 140 ரன்கள் எடுத்தது.

#U19WC2024 : விறுவிறுப்பான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது நேபாள அணி..!

பாகிஸ்தான் அணி உபைத் ஷா 3 விக்கெட்டை கைப்பற்றினார். அதை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் எந்த ஒரு தடுமாற்றமுமின்றி சிறப்பான ஆட்டத்தை இறுதி வரை வெளிப்படுத்தினர். இரு வீரர்களும் இணைந்து நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சை சிதறிடித்தனர்.

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான ஷாமில் ஹுசைன் 54 ரன்களும், ஷாஜாய்ப் கான் 80 ரன்களும் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் 25.2 ஓவருக்கு 144 ரன்களை எடுத்து அணியை வெற்றி பெற  செய்தனர்.

Tags :
Advertisement