For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

இந்த ஐந்து பேரில் ஒருவர் உயிருடன் இல்லை..! யார் அவர்.?

07:18 PM Sep 28, 2023 IST | செந்தில்குமார்
இந்த ஐந்து பேரில் ஒருவர் உயிருடன் இல்லை    யார் அவர்
Who Is Dead [File Image]
Advertisement

பிரைன் டீசர் எனும் விளையாட்டு படங்களைப் பயன்படுத்தி உங்களது பகுத்தறிவுச் சிந்தனைத் திறனை வெளிப்படுத்தப் பயன்படும் ஒரு புதிர் ஆகும். இது உங்களின் கற்பனைத்திறன் மற்றும் துப்பறியும் திறனை மேம்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது.

இத்தகைய புதிரான விளையாட்டுகள் நினைவாற்றல் திறன்களையும், திட்டமிடல், யோசனைகள் மற்றும் சிக்கல்களைத் தீர்க்கும் திறனையும் வளர்க்கின்றன. அந்த வகையில் உங்களது திறன்களை வளர்க்க உதவும் விளையாட்டை நாம் விளையாடப்போகிறோம். இப்பொழுது உங்கள் முன் வைக்கப்பட்டிருக்கும் படத்தை நன்றாக கவனிக்கவும்.

10 செகண்ட் தான் டைம்..! அதுக்குள்ள இந்த எழுத்தை கண்டுபிடிங்க பாப்போம்.?

இதில் பேருந்தில் ஒரு பாட்டி, ஒரு இளைஞர், ஒரு தாய் மற்றும் அவரது குழந்தை உட்பட பேருந்து ஓட்டுநர் என 5 பேர் பயணம் செய்கின்றனர். இதில் உங்களுக்கான கேள்வி என்னவென்றால் இவர்களில் ஒருவர் இப்போது உயிருடன் இல்லை. எனவே இதில் யார் உயிருடன் இல்லை என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

இதுவே உங்களுக்கு சவாலாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால், இந்த சவாலை இன்னும் சுவாரஸ்யமாக மாற்ற மற்றொரு சவாலையும் தருகிறோம். அந்த சவால் என்னவென்றால் நீங்கள் இதில் யார் இறந்திருக்கிறார் என்பதை 15 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும். இப்போது உங்களுக்கான நேரம் ஆரம்பமாகிவிட்டது.

டிக்... டிக்... டிக்....

Who Is Dead
Who Is Dead [File Image]

சீக்கிரம் சீக்கிரம்..நேரம் முடிய போது.

13.... 14.... 15....

உங்கள் நேரம் முடிந்து விட்டது. இந்த 15 வினாடிகளுக்குள் இறந்தவர் யார் என்பதை சரியாக கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் நீங்கள் திறமைசாலிதான். உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள். இப்போது இதற்கான சரியான பதிலைப் பார்ப்போமா..!

விடை:  இதில் இறந்தவர் பேருந்து ஓட்டுநர்

IQ Test: இதில் ஒருவர் உயிருடன் இல்லை, யார் அவர்.? கண்டுபிடிங்க பார்க்கலாம்..

விளக்கம்:

பதிலால் நீங்கள் குழப்பம் அடைய வேண்டாம். அதற்கான விளக்கத்தைப் பார்க்கலாம். நீங்கள் கடைசியாக உட்கார்ந்திருக்கும் பாட்டியை நான்றாக பாருங்கள். அவர் நன்றாக தலையை சாய்த்து வைத்து தூங்குகிறார். அப்பொழுது கூட தனது பர்ஸை கெட்டியாக கையில் பிடித்திருக்கிறார். இதை வைத்துப் பார்த்தால் அவர் இறக்கவில்லை. இரண்டாவதாக, உட்கார்ந்திருக்கும் இளைஞர் காதில் ஹெட்போன் போட்டுகொண்டு பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார். அவரும் இறக்கவில்லை.

அடுத்ததாக தாய் மற்றும் குழந்தை. அவர் அழுதுக்கொண்டிருந்த தனது குழந்தையைத் தூங்க வைத்துவிட்டு, மீண்டும் விழித்து விடுவானோ.? என்ற பயத்துடன் உட்கார்ந்திருக்கிறார். கடைசியாக ஓட்டுனரை பார்க்கையில், அவர் உணர்ச்சிகள் இல்லாமல் பேருந்தின் ஸ்டியரிங் வீல் மீது தனது முகத்தை வைத்து சாய்ந்து இருக்கிறார். இதனை வைத்து ஓட்டுனர் தான் உயிருடன் இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

Who Is Dead
Who Is Dead [File Image]

இத்தகைய புதிர்களை விளையாடும்பொழுது மனநிலை, நினைவாற்றல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் டோபமைன் என்ற ஹார்மோனின் உற்பத்தி அதிகரிக்கிறது. உங்கள் மன வேகத்தையும், நினைவாற்றலை மேம்படுத்த புதிர்கள் ஒரு சிறந்த வழியாகும்.

Tags :
Advertisement