For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

600 கோடியில் எடுக்கப்பட்ட 'கல்கி 2898 AD' ! படம் எப்படி? டிவிட்டர் விமர்சனம் இதோ!

11:54 AM Jun 27, 2024 IST | பால முருகன்
600 கோடியில் எடுக்கப்பட்ட  கல்கி 2898 ad    படம் எப்படி  டிவிட்டர் விமர்சனம் இதோ
Kalki 2898 AD review [File Image]
Advertisement

கல்கி 2898 AD : சினிமாவில் பிரமாண்டமாக ஒரு படம் எடுக்கிறார்கள் என்றால் அந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது வழக்கம் தான். அப்படி தான், 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள 'கல்கி 2898 AD' படமும் கூட, இந்த படத்தின் பட்ஜெட் படத்தின் எதிர்பார்ப்புக்கு ஒரு காரணம் என்றால் மற்றோரு காரணம் படத்தில் நடித்த நடிகர்கள் என்றே சொல்லலாம்.

ஏனென்றால், இந்த திரைப்படத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், திஷா பதானி, அன்னா பென், கீர்த்தி சுரேஷ், சாஸ்வதா சாட்டர்ஜி, பிரம்மானந்தம், மாண்டவ சாய் குமார், பசுபதி, மாளவிகா நாயர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார்.

படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் நிலையில், படத்தை பார்த்துவிட்டு பலரும் தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் டிவிட்டரில் தெரிவித்துள்ள விமர்சனங்களை பற்றி பார்க்கலாம்.

படத்தை பார்த்துவிட்டு ஒருவர் "படம் சினிமாவின் எல்லைகளைத் தாண்டி, தொன்மவியல் மற்றும் அறிவியல் புனைகதைகளை தடையின்றி இணைத்து இணையற்ற சினிமா அனுபவத்தை உருவாக்குகிறது. பிரபாஸ் நடிப்பு நம்மளை கவர்ந்து இழுக்கிறது. தலைமுறைகளுக்கு உண்மையான ரத்தினம் தான் 'கல்கி 2898 AD' என்று கூறியுள்ளார்.

மற்றோருவர் " 'கல்கி 2898 AD' படத்தில் அமிதாப் பச்சன் வரும் அஸ்வத்தாமா காட்சியில் நுழைந்தவுடன் படம் முழுவதுமாக மாறுகிறது ஐயா உங்கள் நடிப்புக்காக வார்த்தைகளை இழந்துவிட்டேன்" என கூறியுள்ளார்.

மற்றோருவர் " படத்தின் முதல் பாதி நன்றாக இருந்தது, அதைத் தொடர்ந்து சராசரிக்கு மேல் 2வது பாதிஅறிமுகம், இடைவெளி, க்ளைமாக்ஸ் & தொடர்ச்சி கிண்டல் ஆகிய காட்சிகள் எல்லாம் அருமையாக இருந்தது. அமிதாப் பச்சன் & கமல்ஹாசன் கதாபாத்திரங்கள் நம்மளை ரசிக்க வைக்கிறது. திரைக்கதையில் குறைபாடுகள் உள்ளன, ஆனால் இயக்குனர் நாக் அஷ்வினின் பார்வை தனித்து நிற்கிறது" என கூறியுள்ளார்.

மற்றோருவர் " படத்தைச் சுற்றி உள்ளேயும் வெளியேயும் செல்லும் திரைக்கதையில் சில குறைகள் உள்ளன. அமிதாப் பச்சன் & கமல்ஹாசன் ஆகியோருக்கு அருமையான கதாபாத்திரம். தீபிகா & பிரபாஸ் கதாபாத்திரங்கள் ஓகே. திஷா பதானி கதாபாத்திரம் செட் ஆகவில்லை. பல கலைஞர்களின் கேமியோக்கள் அதிகம் ஆதரிக்கவில்லை. சந்தோஷ் நாராயணன் இசை நன்றாக இருக்கிறது. பின்னணி இசை திரும்ப திரும்ப வந்தது. இயக்குனர் நாகஅஷ்வியிடம் இருந்து நல்ல தொலைநோக்கு மற்றும் மேக்கிங்" என கூறியுள்ளார்.

மற்றோருவர் " இறுதியாக, பிரபாஸின் கடின உழைப்பு மற்றும் நாகஷ்வின் இயக்கம் அருமை. கல்கி படம் மிகவும் அருமையாக இருக்கிறது. எல்லா இடங்களிலும் அறிக்கைகள் மூலம் படத்திற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. கல்கி சினிமாவின் புகழை உலக அளவில் உயர்த்தி வருகிறது.

Tags :
Advertisement