For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

விவாகரத்து செய்ய முடிவெடுத்த ஜெயம் ரவி - ஆர்த்தி? தீயாய் பரவும் தகவல்!!

04:59 PM Jun 25, 2024 IST | பால முருகன்
விவாகரத்து செய்ய முடிவெடுத்த ஜெயம் ரவி   ஆர்த்தி  தீயாய் பரவும் தகவல்
jayam ravi and wife [file image]
Advertisement

ஜெயம் ரவி : சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் எதிர்கொள்ளும் வதந்திகள் மிகப்பெரிய ஒன்று விவாகரத்து வதந்தி என்றே கூறலாம். விவாகரத்து வதந்தி வெளியான பிறகு சற்று அதிர்ச்சியாகி அவர்கள் இதற்கு விளக்கமும் கொடுப்பது உண்டு. அப்படி தான், தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஜெயம் ரவியும் அவரது மனைவி ஆர்த்தி ரவியும் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளதாக வெளியான தகவல் தான் வைரலாகி கொண்டு இருக்கிறது.

இப்படியான ஒரு தகவல் பரவுவதற்கு முக்கிய காரணமே ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி செய்த விஷயம் ஒன்று தான். அப்படி என்ன செய்தார் என்றால் மூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆர்த்தி, ஜெயம் ரவியுடன் இருக்கும் படங்களை அடிக்கடி சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது வழக்கமானது.

jayam ravi aarthi
jayam ravi aarthi [file image]
ஆனால், திடீரென இன்று ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து கணவருடன் உள்ள அனைத்து படங்களையும் நீக்கியுள்ளார். இதன் காரணமாக தான் இருவருக்கும் இடையே எதோ பிரச்சனை போல எனவும், விவாகரத்து செய்ய முடிவு எடுத்து தான் இப்படி செய்தார் எனவும் தீயாக தகவல்கள் பரவி வருகிறது.

இந்த தகவல் பற்றி இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், இப்படி ஒரு அதிர்ச்சி செய்து வைரலாகி வருவதால் கண்டிப்பாக இருவரும் இணைந்து அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிப்பார்கள் எனவும் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். மேலும். நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தியை கடந்த 2009 இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement