For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

கிராமி விருதில் மது அருந்திய பிரபலம்.! வைரலாகும் வீடியோ...

04:12 PM Feb 05, 2024 IST | கெளதம்
கிராமி விருதில் மது அருந்திய பிரபலம்   வைரலாகும் வீடியோ
GRAMMY - jay z [ FILE IMAGE]
Advertisement

இசைத்துறையின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் கிராமி விருது விழாவில், டாக்டர் டிரே குளோபல் இம்பாக்ட் விருதைப் வென்ற "ஜெய் இசட்" தனது விருது கோப்பையில் மது அருந்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதுகளில் ஒன்று ‘கிராமி விருதுகள்’. ஆண்டுதோறும் தேசிய ஒலிபிடிப்பு கலைகள் மற்றும் அறிவியல் அகாடெமி (National Academy of Recording Arts & Sciences) வழங்கி வருகிறது.

அந்த வகையில், 66வது ஆண்டு கிராமி விருதுகள் விழா கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் ‘Crypto.com’ அரங்கத்தில் நடைபெற்றது. அதில் அக்டோபர் 1, 2022 முதல் செப்டம்பர் 15, 2023 வரையிலான சிறந்த பதிவுகள், இசையமைப்புகள் மற்றும் கலைஞர்களுக்கான கிராமி விருதுகள் அறிவிக்கப்பட்டது.

இதில், அமெரிக்கா ராப் இசைக் கலைஞரான ஜெய்-இசட்-க்கு இசைத்துறையில் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில், டாக்டர் ட்ரே குளோபல் இம்பாக்ட் விருது வழங்கப்பட்டது. டாக்டர் ட்ரே குளோபல் இம்பாக்ட் விருதை ஏற்றுக்கொண்ட ஜே-இசட், மகள் ப்ளூ ஐவியை மேடையில் அழைத்து சென்று விருதினை பெற்று கொண்டார்.

கிராமி விருதுகள் 2024: வெற்றியாளர்களின் முழு பட்டியல்!

விருதை பெற்று கொண்ட ஜெய்-இசட் மேடையில் கீழே வந்து தனது சக நண்பர்களுடன், இதனை கொண்டாடும் வகையில், தான் பெற்று கொண்ட கிராமிய விருது கோப்பையில் மது ஊற்றி அருந்தியுள்ளார். ஜெய்-இசட் தனது விருது கோப்பையில் மது அருந்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by CBS (@cbstv)

ஜெய்-சி (Jay-Z) என்ற அழைக்கப்படும் ஷான் கோரி கார்டர், அமெரிக்காவின் புகழ்பெற்ற ராப் இசைக் கலைஞர் ஆவார். அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் பிறந்து வளந்த இவர், சிறுவயதிலேயே இருந்து இசை துறையில் தீரா ஆர்வம் கொண்டவர்.

Tags :
Advertisement