For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

SK21 படத்தின் கதை இதுவா? வெளியான புதிய தகவல்!!

10:39 AM Feb 14, 2024 IST | பால முருகன்
sk21 படத்தின் கதை இதுவா  வெளியான புதிய தகவல்
sk 21 [File Image]
Advertisement

சிவகார்த்திகேயன் நடித்து வரும் SK21 திரைப்படத்தின் கதை குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. 

SK21

நடிகர் சிவகார்த்திகேயன் அயலான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் உருவாகி வரும் தனது 21-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது சிவகார்த்திகேயனின் 21-வது படம் என்பதால் இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக SK21 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தினை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கதைக்கு தேவைன்னா பிகினி என்ன? ‘நிர்வாணமாக நடிப்பேன்’! ஸ்வேதா மேனன் பேச்சு!

படத்தில் நடிகை சாய்பல்லவி தான் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படத்தில் இருந்து சின்னதாக க்ளீம்பஸ் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. வீடியோவில் சிவகார்த்திகேயன் வெறித்தனமாக படத்திற்காக ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தார். வீடியோவை பார்த்த பலருக்கும் படம் எந்த மாதிரி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகி இருக்கிறது.

SK21 கதை 

இந்நிலையில், சிவகார்த்திகேயன் 21-வது படத்தின் கதை குறித்த தகவல் தற்போது கிடைத்து இருக்கிறது. அது என்னவென்றால், இந்த திரைப்படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை வைத்து தான் எடுக்கப்பட்டு வருகிறதாம். மேஜர் முகுந்த் வரதராஜன் ஏ.சி, இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்தவர்.  இவருடைய வாழ்வில் நடந்த சம்பவங்களை வைத்து தான் தற்போது SK21 திரைப்படம் உருவாகி வருகிறதாம்.

SK21 தலைப்பு 

SK21 திரைப்படத்தின் தலைப்பு வரும் பிப்ரவரி 17ம் தேதி சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு, டைட்டில் மற்றும் டீசர் பிப்ரவரி 16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement