For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

IQ Test: இதில் எந்த சூட்கேஸ் யாருக்கு சொந்தம்.? 10 செகண்டுக்குள் பதில் சொல்லுங்க பார்க்கலாம்..!

02:52 PM Sep 17, 2023 IST | செந்தில்குமார்
iq test  இதில் எந்த சூட்கேஸ் யாருக்கு சொந்தம்   10 செகண்டுக்குள் பதில் சொல்லுங்க பார்க்கலாம்
Find Suitcase [File Image]
Advertisement

உங்கள் மூளையின் சிந்திக்கும் திறனை திறப்பதற்காக நாம் பல சிக்கலான விளையாட்டுகளை விளையாடி வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் விளையாடப் போகும் விளையாட்டு உங்களின் உற்று நோக்கும் திறனை மேம்படுத்தக்கூடும். இப்பொழுது நாம் விளையாட்டை விளையாட ஆரம்பிக்கலாம். உங்கள் முன் ஒரு புகைப்படம் புகைப்படமானது வைக்கப்பட்டிருக்கும்.

அந்த புகைப்படத்தில் விமான நிலையத்தில் பயணிகள் தங்களின் உடைமைகளை எடுக்கும் இடம் ஆனது காட்டப்பட்டிருக்கும். அதில் மூன்று நபர்கள் தங்களுக்கு எதிரே மூன்று சூட்கேஸ்களை வைத்து குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் அவர்களுக்கு தங்களின் சூட்கேஸ் எது என்று தெரியவில்லை. இதற்கு காரணம் அந்த மூன்று சூட்கேஸ்களின் நிறமும் ஒரே மாதிரியாக உள்ளது.

இதையும் படிங்களேன்: Brain Teaser: 4 செகண்ட் தான்..இந்த தீக்குச்சிய 4 ஆக மாத்துங்க..! ஆனா உடைக்க மட்டும் கூடாது..!

இதனால் மூவரும் குழம்பிபோயுள்ளனர். இதில் உங்களுக்கான கேள்வி என்னவென்றால் இந்த மூவரின் சூட்கேஸை சரியாக கண்டுபிடித்து, அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு நீங்கள் முயற்சி செய்யும் பொழுது உங்களுடைய மனநிலை ஆனது தெளிவாக இருக்கும். இப்பொழுது இந்த சவாலை முடிப்பதற்கு உங்களுக்கு 10 வினாடிகள் வழங்கப்படும். அதற்குள் இந்த சவாலை நீங்கள் முடிக்க வேண்டும்.

ஏனென்றால் இந்த விளையாட்டை விளையாட ஆரம்பித்த நபர்களின் 2 சதவீதம் பேர் மட்டுமே இதனை சரியாக கண்டுபிடித்துள்ளனர். எனவே நீங்கள் புகைப்படத்தை நன்றாக உற்றுநோக்கி, அதிலிருக்கும் சிறுசிறு குறிப்புகளை கவனமாக பார்க்க வேண்டும். உங்களது அப்பொழுதுதான் உங்களால் வெற்றி பெற முடியும். இப்பொழுது உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது.

ஒன்று... இரண்டு.... மூன்று....

Find Suitcase
Find Suitcase [File Image]

நேரம் முடிந்து விட்டது....

இதையும் படிங்களேன்: IQ Test: இதில் யார் இவரின் மனைவி..? 10 செகண்டுக்குள்ள கண்டுபிடிங்க பாக்கலாம்..!

உங்களுக்கு வழங்கப்பட்ட 10 வினாடிகள் கால அவகாசம் முடிந்து விட்டது. உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை உங்களுக்கான பதில் இறுதி பத்தியில் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த 10 வினாடிகளுக்குள் எந்த சூட்கேஸ் யாரோடது என்று கண்டுபிடித்திருந்தால் உங்களுக்கு வாழ்த்துக்கள். இப்பொழுது இந்த புதிருக்கான பதிலை பார்க்கலாம்.

விடை: இதில் 'A' சூட்கேஸ் ஆனது நாயை வைத்திருக்கும் பெண்ணின் சூட்கேஸ் ஆகும். 'B' சூட்கேஸ் ஆனது நடுவில் நிற்கும் பெண்ணிற்கு சொந்தமானது. அதோடு 'C' சூட்கேஸ் முதலில் இருக்கும் அந்த நபரின் சூட்கேஸ் ஆகும்.

விளக்கம்:

அது எப்படி என்றால் 'A' சூட்கேஸை நன்றாக உற்று நோக்கினால் நாயின் கால் நகம் ஆனது பதிந்திருக்கும். இதனை வைத்து அந்த சூட்கேஸ் கடைசியில் உள்ள பெண்ணிற்கு சொந்தமானது என்பதை தெரிந்து கொள்ளலாம். 'C' சூட்கேஸ் கைப்பிடியில் ஒரு மஞ்சள் நிற பாதுகாப்பு டாலர் உள்ளது. அது முதல் நபரின் சட்டையில் இருக்கும் அடையாளத்தோடு ஒத்துப்போகிறது. இதனால் கடைசி சூட்கேஸ் முதல் நபருக்கு சொந்தமானது. நடுவில் இருக்கும் சூட்கேஸில் எந்த வித அடையாளமும் இல்லை. எனவே அது நடுவில் உள்ள பெண்ணிற்கு சொந்தமானது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Find Suitcase
Find Suitcase [File Image]

இதையும் படிங்களேன்: IQ Test: இதில் எந்த அணி வெற்றி அடையும்..? ‘A’ அல்லது ‘B’…முடிந்தால் கண்டுபிடிங்க..!

Tags :
Advertisement