For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

#IQ Test: இந்த மூவரில் யார் முதலாளி..? 15 வினாடிக்குள் கண்டுபிடிங்க பாக்கலாம்.!

01:06 PM Oct 16, 2023 IST | செந்தில்குமார்
 iq test  இந்த மூவரில் யார் முதலாளி    15 வினாடிக்குள் கண்டுபிடிங்க பாக்கலாம்
Find Boss
Advertisement

புதிர் விளையாட்டுகள் வேடிக்கையாக ஒன்றாக இருந்தாலும், அதனை விளையாடும்பொழுது உங்கள் மூளையின் ஐக்யூ திறன் மற்றும் கூர்ந்து கவனிக்கும் திறன் அதிகரிக்கும். இதனால் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்படும் சமயத்தில், அதில் இருந்து தப்பவும் அதனை தீர்க்கவும் உங்களால் விரைந்து முடிவெடுக்க முடியும்.

அப்படிப்பட்ட ஒரு விளையாட்டை நாம் இப்பொழுது விளையாட போகிறோம். இந்த விளையாட்டில் உங்கள் முன் ஒரு புகைப்படமானது வைக்கப்பட்டிருக்கும். இந்த புகைப்படத்தை நன்றாக பார்த்தால், ஒரு அலுவலகத்தில் மூன்று நபர்கள் இருக்கிறார்கள். இதில் முதல் நபர் ஆலோசனை செய்கிறார். இரண்டாவதாக உள்ள நபர் அமைதியாக அமர்ந்திருக்கிறார். மூன்றாவது நபர் யோசித்துக் கொண்டிருக்கிறார்.

புதையலுக்கான சரியான பூட்டு எது.? கண்டுபிடிக்க கடற்கொள்ளையருக்கு உதவுங்கள்.!

இதில் உங்களுக்கான சவால் என்னவென்றால் இந்த மூவரில் யார் முதலாளி என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். இதனை கண்டுபிடிக்க உங்களுக்கு 15 வினாடிகள் மட்டுமே வழங்கப்படும். அதற்கு இவர்களில் யார் முதலாளி என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இப்போது உங்களுக்கான நேரம் ஆரம்பமாகிவிட்டது.

1… 2…. 3….

இந்த புகைப்படத்தை நன்றாக கவனித்தால் சரியான பதிலை குறித்த நேரத்தில் கண்டுபிடித்து விடலாம்.

Find Boss
Find Boss

நேரம் போய்க்கொண்டிருக்கிறது..

13… 14… 15…

உங்களுக்கு வழங்கப்பட்ட நேரம் முடிந்து விட்டது. இந்த 15 வினாடிகளுக்குள் யார் முதலாளி என்பதை நீங்கள் கண்டுபிடித்து இருந்தால் உங்களுக்கு எங்களது வாழ்த்துக்கள். அவ்வாறு முடியாத பட்சத்தில் கீழே உள்ள பத்தியை படித்து அதற்கான பதிலை தெரிந்து கொள்ளலாம். இப்பொழுது இதற்கான சரியான பதிலை பார்ப்போம்.

விடை:  முன்றாவது நபர் தான் பாஸ்

இந்த ஐந்து பேரில் ஒருவர் உயிருடன் இல்லை..! யார் அவர்.?

விளக்கம்: 

இதில் நீங்கள் முதல் நபரை கவனித்தீர்கள் என்றால், அவர் பிளேஸர் அணிந்து கொண்டு முதலாளியின் இடத்தில் நின்று பேசி வருகிறார். இதனால் அவர் பாஸ் என்று நினைத்தால் அது தவறு. இரண்டாவது நபர் அந்த அலுவலகத்தில் வேலை செய்பவர் போல தெரியவில்லை. ஏனென்றால் அவர் டி-சர்ட் அணிந்து வந்திருக்கிறார். இப்போது மூன்றாவது நபரையும், முதலாளியின் நாற்காலியையும் கவனியுங்கள். அவரது பிளேஸர் முதலாளியின் நாற்காலியில் உள்ளது. எனவே மூன்றாவது நபர்தான் முதலாளி.

Find Boss
Find Boss

இந்த சவால் உங்கள் மனதை மாற்றி, கொஞ்சம் சுறுசுறுப்பாக உங்களை மாற்றியிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

Tags :
Advertisement