For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

ப்ளீஸ் என்னை தேடாதீங்க.. கெஞ்சிய தமன்னா.! அதிரடியாக கைது செய்த காவல்துறை.!

07:49 AM Mar 16, 2023 IST | மணிகண்டன்
ப்ளீஸ் என்னை தேடாதீங்க   கெஞ்சிய தமன்னா   அதிரடியாக கைது செய்த காவல்துறை
Advertisement

சர்ச்சையான வீடியோ பதிவிட்டு தலைமறைவாக இருந்த இன்ஸ்டா தமன்னாவை தனிப்படை காவல் துறையினர் கோவை சங்ககிரியில் கைது செய்தனர். 

கோவை, கீரநத்தம் பகுதியை சேர்ந்த கோகுல் என்பவர் அண்மையில் கோவை நீதிமன்றத்தின் அருகே கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவமானது, கடந்த 2021 ரத்தினபுரியை சேர்ந்த குரங்கு ஸ்ரீராம் என்பவரின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கோகுல் இருந்தார் எனவும் அதற்கு பலி வாங்கல் சம்பவமாக இந்த கொலை சம்பவம் நடந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. .

கஞ்சா வழக்கு :

இதனால், குரங்கு ஸ்ரீராம் நண்பர்களை தனிப்படையினர் தேடி வந்தனர். அப்போது,
ரத்தினபுரியை சேர்ந்த வினோதினி எனும் தமன்னா  என்பவரின் இன்ஸ்ட்டா வீடியோ சிக்கியது. இவர் ஏற்கனவே பீளமேடு பகுதியில் கஞ்சா விற்றதாக கூறி கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர்.

சர்ச்சை ரீல்ஸ் :

கோகுல் - குரங்கு ஸ்ரீராம் என இரு கும்பல்களுக்கும் பிரச்சனை ஏற்பட இருவரும் காரணம் என கூறப்படுகிறது. மேலும், இவர் பதிவிட்ட ரீலிஸில் ஆயுதங்கள் வைத்து இருபப்து, புகை பிடிப்பது என ஒரு ரவுடி கும்பலுக்கு ஆதரவாக வீடியோ பதிவிட்டு இருந்ததால் தனிப்படை காவல் துறையினர்  தீவிரமாக தேட ஆரம்பித்தனர்.

தமன்னா வீடியோ :

தன்னை போலீஸ் தேடுவது பற்றி அறிந்த வினோதினி எனும் இன்ஸ்டா தமன்னா, புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், தான் 2 ஆண்டுக்கு முன்பு பதிவிட்ட வீடியோ தற்போது வைரலாகிறது என்றும், தன்னை கஞ்சா வழக்கில் கைது செய்து, பின்னர் சிறைக்கு சென்று வந்த பின்னர் வேறு மாதிரியான வீடியோ போடுவதில்லை என்றும், தற்போது திருமணம் செய்து வாழ்ந்து வருவதாகவும், 6 மாத கர்ப்பமாக இருப்பதாகவும். ப்ளீஸ் என்னை தேடாதீர்கள் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

தனிப்படை கைது :

இதனை தொடர்ந்து, சங்ககிரியில் பதுங்கி இருந்த இன்ஸ்டா தமன்னாவை காவல்துறையினர் கைது செய்தனர். ஆயுத பிரிவு சட்டம் உள்ளிட்ட சட்ட பிரிவு பதியப்பட்டுள்ளது  நேற்று காலை சங்ககிரியில் கைது செய்து பீளமேடு காவல் நிலையத்தில் விசாரித்து, பின்னர் கைது செய்தனர். அவர் கர்ப்பிணியாக இருப்பதால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement