For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

மிரட்டலாக வெளிவந்த இந்தியன் 2 ட்ரைலர்.!

07:35 PM Jun 25, 2024 IST | கெளதம்
மிரட்டலாக வெளிவந்த இந்தியன் 2 ட்ரைலர்
kamal haasan - indian 2 [File Image]
Advertisement

இந்தியன் 2 : இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'இந்தியன் 2' திரைப்படம் ஜூலை 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், படத்தின் விளம்பரப் பணிகள் மிகப்பெரிய அளவில் தொடங்கியுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, இந்தியன் 2 படத்தின் விளம்பர நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. அந்த வகையில், டிரெய்லர் இன்று (ஜூன் 25ஆம் தேதி) மாலை 7 மணிக்கு வெளியாகிறது என படக்குழு அறிவித்திருந்தபடி, தற்போது வெளியாகியுள்ளது.

படத்திற்கான எதிர்பார்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறதோ, அதே அளவுக்கு இந்த டிரெய்லரும் அமைந்துள்ளது. ஒன்றாம் பாகத்தில் ஜனாதிபதியாக வரும் கமல், இந்தியன் 2 விழும் அதே போல் மிரட்டியுள்ளார். இப்படம் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக படமாக்கப்பட்டுவரும் நிலையில் படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தியன் 2 படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். மேலும், இப்படத்தில், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், எஸ்.ஜே. சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Tags :
Advertisement