HomeTop Storiesஇந்தியா தமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமா லைஃப்ஸ்டைல்தொழில்நுட்பம்ஆன்மீகம்
Advertisement

நான் ஒன்னு முட்டாள் இல்லை! அந்த கேள்விக்கு கடுப்பான நடிகை வாணி போஜன்!!

06:07 PM Jun 27, 2024 IST | பால முருகன்
vani bhojan [file image ]
Advertisement

வாணி போஜன் : சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றி அடிக்கடி வதந்தியான விஷயங்கள் பரவுவது என்பது வழக்கமான ஒன்று அதன்பிறகு அந்த நடிகைகள் அதற்கு விளக்கமும் அளித்து நாம் பார்த்திருப்போம். அப்படித்தான் நடிகை வாணி போஜனும் சமீபத்திய பேட்டி ஒன்று கலந்து கொண்ட போது விளக்கம் கொடுத்திருக்கிறார்.

Advertisement

நடிகை வாணி போஜன் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் அந்த படத்திற்கு முன்னதாக அந்த கதையை ஒரு நடிகரிடம் கூறிவிட்டு தான் அந்த ஹீரோ சம்மதம் தெரிவித்தால் மட்டும்தான் அந்த படத்தில் நடிப்பார் என செய்திகள் வைரலாகி வந்தது. இதனையடுத்து,  சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுக்கும்போது கலந்து கொண்ட வாணி போஜனிடம் இந்த தகவலுக்கு நீங்கள் விளக்கம் அளிக்க என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது

அதற்கு பதில் அளித்த வாணி போஜன் "இப்படி ஆன தவறான தகவல்களை போடுவது யூடியூபில் இருந்து கிடைக்கும் வருமானத்திற்காக என்று நான் நினைக்கிறேன்.  ஏனென்றால், இன்னொரு ஹீரோ கதை சொல்லி ஓகே சொன்னதுக்கு பிறகு நான் அந்த படத்தில் நடிக்க முட்டாள் இல்லை எனக்கும் அறிவு இருக்கிறது. எனவே இது போன்ற வதந்தியான விஷயங்களை நம்ப வேண்டாம்" என கூறி உள்ளார்.

சின்னத்திரையில் ஒரு காலத்தில் கலக்கி கொண்டு இருந்த நடிகை வாணிபோஜன் தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டு இருக்கிறார். மேலும், நடிகை வாணி போஜன் பகைவனுக்கு அருள்வாய் , ஆரியன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
#Aaryan#CasinoVani Bhojan
Advertisement