For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

நான் பதவியை ராஜினாமா செய்யவில்லை - நெல்லை மேயர் சரவணன்

04:14 PM Aug 31, 2023 IST | லீனா
நான் பதவியை ராஜினாமா செய்யவில்லை   நெல்லை மேயர் சரவணன்
SARAVANAN [IMAGESOURCE : MINNAMPALAM]
Advertisement

நெல்லை மேயர் பதவியிலிருந்து சரவணன் ராஜினாமா செய்வதாகவும், தலைமைக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.  சில நாட்களாகவே கவுன்சிலர்கள் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வந்த நிலையில் இந்த செய்தி வெளியானது.

மேயர் சரவணனுக்கும், முன்னாள் மாவட்ட செயலாளர் அப்துல் வஹாபிற்க்கும் இடையே மோதல் நிலவி வந்த நிலையில், தொடர்ந்து மேயரை மாற்ற கோரி மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் போர்கொடி தூக்கி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நெல்லை மேயர் சரவணன் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை என விளக்கமளித்துள்ளார். மேலும், மாமன்ற உறுப்பினர்களுக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை, நெல்லை மாநகராட்சியில் வளர்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement