For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

ஹாக்கி புரோ லீக்: அமெரிக்காவை வீழ்த்திய இந்தியா ..!

01:42 PM Feb 10, 2024 IST | murugan
ஹாக்கி புரோ லீக்   அமெரிக்காவை வீழ்த்திய இந்தியா
Hockey Pro League
Advertisement

கடந்த 7-ம் தேதி  நடைபெற்ற போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 0-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.  இந்நிலையில், புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற புரோ லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 3-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது.

இந்திய அணி சார்பில் வந்தனா கட்டாரியா 9வது நிமிடத்திலும், தீபிகா 26வது நிமிடத்திலும், சமிலா டெட்டே 56வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்த போட்டியில்  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் தோல்விகளுக்குப் பிறகு முதல் வெற்றியைப் பெற்றது.

Chess960 : கார்ல்சனை வீழ்த்தினார் இந்திய செஸ் வீரர் குகேஷ் ..!

சீனா, நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்த பின்னர் இந்திய அணி மிகுந்த அழுத்தத்தின் கீழ் நேற்றைய போட்டிக்கு வந்த நிலையில் அமெரிக்காவை வீழ்த்திய இந்தியா முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றி பயிற்சியாளர் ஜன்னெக் ஸ்கோப்மேன் நிம்மதிப் பெருமூச்சு விட உதவியது.

வெற்றி பெற்ற பிறகு ஹாக்கி வீராங்கனை தீபிகா தாக்கூர் கூறுகையில்" பல போட்டிகளில் தோல்வியடைந்த பிறகு, அணி மீண்டும் வெற்றிக்கு திரும்புவது கடினம். எங்கள் அணியின் முயற்சி மற்றும் ரசிகர்களின் ஆதரவால் நாங்கள் மீண்டும் வர முடிந்தது" என கூறினார்.

Tags :
Advertisement