For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு.!

11:28 AM Feb 10, 2024 IST | கெளதம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ 80 குறைவு
gold price [File Image]
Advertisement

பிப்ரவரி 1ஆம் தேதி ரூ.47,040க்கு விற்பனையான தங்கத்தின் விலை, 10 நாட்களில் ரூ.400 சரிந்திருக்கிறது.

சரவதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, ஒரு நாட்டில் தங்கம் வெட்டி எடுக்கும் அளவு, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி, உள்நாட்டு தேவை மற்றும் நுகர்வோர் முதலீடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் விலையில் தினம் தினம் ஏற்றம் இறக்கம் ஏற்படுகிறது.

பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, ​​தங்கத்தின் விலையும் உயர்கிறது. இவ்வாறு தினமும் ஏற்றம், இறக்கும் காணப்படும் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம்.

சென்னையில் (10. 02. 2024) இன்றைய நிலவரப்படி,  ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,830க்கு விற்பனையாகிறது. நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.46,720க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.80 குறைந்து ரூ.46,640க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ஒன்றுக்கு ரூ.76.50 என்று விற்பனையாகிறது.

அரசியல் ஒரு துறை கிடையாது…விஜய் வருகை குறித்து நடிகர் விஷால் கருத்து.!

சென்னையில் நேற்றைய தினம் (09. 02. 2024) 22 காரட் தங்கம் நேற்றைய விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் 5,840 ரூபாய்க்கும், ஒரு சவரன் 46,720 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை 1 கிராம் 76 ரூபாய், 50 காசுகளுக்கும்,1 கிலோ 76,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement