For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

இந்திய முன்னாள் வீரர் டேவிட் ஜான்சன் காலமானார் ..! ஜெய்ஷா, கம்பிர் இரங்கல்!!

04:13 PM Jun 20, 2024 IST | அகில் R
இந்திய முன்னாள் வீரர் டேவிட் ஜான்சன் காலமானார்     ஜெய்ஷா  கம்பிர் இரங்கல்
David Johnson [file image]
Advertisement

டேவிட் ஜான்சன்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேக பந்து வீச்சாளரான டேவிட் ஜான்சன் இன்று தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே இறந்து கிடந்ததாக உள்ளூர் போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர். இதனால், இவர் கொத்தனூர் கனக ஸ்ரீ லே அவுட்டில் உள்ள வீட்டில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

மேலும், இது குறித்தது அதிகாரிகள் மேற்கொண்டு விசாரணைகளையும் நடத்தி வருகின்றன.  டேவிட் ஜான்சன் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவர் ஆவார்.  கடந்த 1996 ம் ஆண்டில் இந்தியாவுக்காக, ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். அந்த போட்டியிலும் இவர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

1995-96 ரஞ்சி டிராபி சீசனில் அவரது சிறப்பான சாதனை ஒன்று தான், கேரளாவுக்கு எதிராக 152 ரன்கள் விட்டு கொடுத்து 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதன் மூலம் தான் இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது மரணம் கிரிக்கெட் வட்டாரங்களில் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரான ஜெய்ஷா அவரது எஸ் தளத்தில் தனது இரங்கலை தெரிவித்து இருந்தார். அவர், "நமது முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளரான டேவிட் ஜான்சனின் குடும்பத்தினருக்கும், அவரது நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.

கிரிக்கெட் விளையாட்டில் அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்" என பதிவிட்டிருந்தார். மேலும், இந்தியா அணியின் முன்னாள் பேட்ஸ்மேனான கம்பிரும் இரங்கலை தனது X தளத்தில் தெரிய்வித்திருந்தார். அவர், "டேவிட் ஜான்சனின் மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், அன்பானவர்களுக்கும் கடவுள் பலம் தரட்டும்" என பதிவிட்டு இரங்கலை தெரிவித்து இருந்தார்.

Tags :
Advertisement