For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

லட்சத்தில் இருந்து கோடிக்கு சம்பளத்தை உயர்த்திய மணிகண்டன்?

05:18 PM Feb 13, 2024 IST | பால முருகன்
லட்சத்தில் இருந்து கோடிக்கு சம்பளத்தை உயர்த்திய மணிகண்டன்
manikandan [FILE IMAGE]
Advertisement

ஜெய் பீம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான மணிகண்டன் அடுத்ததாக குட் நைட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இவருக்கு குட் நைட் திரைப்படத்தின் மூலம் தனி ரசிகர்கள் கூட்டமே உருவானது என்றே சொல்லலாம். குட்நைட் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பெரிய அளவில் விமர்சனங்களை பெற்றது. வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது.

இந்த குட் நைட் திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் மணிகண்டன் 20 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கி இருந்தாராம். அதன்பிறகு குட் நைட் படம் வெற்றிபெற்று விட்ட காரணத்தால் தனது சம்பளத்தை கோடியில் உயர்த்தி படங்களில் நடிக்க 2 கோடி கேட்டாராம். ஆனால், அவர் கேட்ட சம்பளத்திற்கு எந்த தயாரிப்பு நிறுவனமும் முன்வரவில்லையாம்.

தீபாவளி வசூல் வேட்டைக்கு தயாரான வேட்டையன்? மிரட்டல் அப்டேட் இதோ!

பிறகு 20 லட்சத்திற்கு சம்பளத்தை பேசி தான் லவ்வர் திரைப்படத்தில் நடித்திருந்தாராம். லவ்வர் திரைப்படத்தினை பிரபுராம் வியாஸ் என்பவர் இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படமும் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது.

எனவே, லவ்வர் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியஒ வெற்றியை பெற்று இருக்கும் நிலையில், மணிகண்டன் இனிமேல் சம்பளத்தை உயர்த்தி அதிகமாக வாங்கவேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறாராம். அதன்படி, இனிமேல் தான் நடிக்கும் படங்களில் கதை நன்றாக இருந்தாலும் 2 கோடி சம்பளம் கேட்க முடிவு எடுத்து இருக்கிறாராம்.

இவர் இப்படி சம்பளத்தை உயர்த்த முக்கிய காரணமே லவ்வர் திரைப்படம் கொடுத்த வெற்றி தான். தொடர்ச்சியாக தான் நடிக்கும் படங்கள் வெற்றி பெறுவதால் சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement