For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

வலிமையை போல் வாடும் விடாமுயற்சி.! நூதன முறையில் இறங்கிய அஜித் ரசிகர்கள்.!

04:58 PM Feb 26, 2024 IST | கெளதம்
வலிமையை போல் வாடும் விடாமுயற்சி   நூதன முறையில் இறங்கிய அஜித் ரசிகர்கள்
vidamuyarchi update [File Image]
Advertisement

விடாமுயற்சி படத்தின் அப்டேட்டை வெளியிடாமல் இருக்கும் லைகா நிறுவனத்திற்கு அஜித் ரசிகர்கள் வித்தியாசமான முறையில் அப்டேட் கேட்டுள்ளனர்.

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த படத்தின் பெரும்பாலான பகுதியின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் முடிவடைந்தது. மீதமுள்ள படப்பிடிப்பை சென்னையில் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார் . மேலும் வில்லன்களாக ஆரவ் மற்றும் அர்ஜுன் நடித்துள்ள இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

READ MORE - விண்ணை தாண்டி வருவாயா ‘வாய்ப்பு போச்சு ரொம்ப நொந்துட்டேன்’- ஜனனி வேதனை!

பொதுவாக அஜித் படம் என்றால் விரைவில் அப்டேட் வெளியாகாது, அதற்கு எடுத்துக்காட்டாக வலிமை திரைப்படத்தை எடுத்துக்கொள்ளலாம். அதே நிலைதான் தற்போது விடாமுயற்சி படத்திலும் நிலவி வருகிறது.

READ MORE - Raayan: இன்னும் யாரெல்லாம் இருக்காங்க? மிரட்டும் தனுஷின் ‘ராயன்’ காஸ்ட்.!

ஆம், வலிமை படப்பிடிப்பின் போதும் முடிந்த பிறகும் படத்தின் அப்டேட் ஒன்று கூட வெளியாகவில்லை. இதனால், அப்செட் ஆன ரசிகர்கள் செல்லும் இடத்தில் எல்லாம் வலிமை அப்டேட் கேட்க தொடங்கினர். அந்த வரிசையில், கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடங்கி லடாக் வரை சென்றது.

READ MORE - Kenneth Mitchell : ‘கேப்டன் மார்வெல்’ பட நடிகர் கென்னத் மிட்செல் காலமானார்.!

அது போல, புதுச்சேரியில் அஜித்தின் வாலி திரைப்படம் ரீரிலீஸ் ஆன நிலையில், தியேட்டர் முன் அஜித் ரசிகர்கள், லைக்காவை காணவில்லை.. விடாமுயற்சி டைட்டில் விட்டு 300 நாளாச்சு.. படத்தோட அப்டேட் என்னாச்சு.. கண்டுபிடித்து தருபவருக்கு தக்க சன்மானம் வழக்கப்படும் என   எழுதப்பட்டிருக்கும் பேனரை வைத்து நூதன முறையில் அப்டேட் கேட்டனர்.

Tags :
Advertisement