For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை...இன்றைய நிலவரம்.!

12:51 PM Feb 07, 2024 IST | கெளதம்
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை   இன்றைய நிலவரம்
gold price [File Image]
Advertisement

சரவதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, ஒரு நாட்டில் தங்கம் வெட்டி எடுக்கும் அளவு, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி, உள்நாட்டு தேவை மற்றும் நுகர்வோர் முதலீடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் விலையில் தினம் தினம் ஏற்றம் இறக்கம் ஏற்படுகிறது.

பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, ​​தங்கத்தின் விலையும் உயர்கிறது. இவ்வாறு தினமும் ஏற்றம், இறக்கும் காணப்படும் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம்.

சென்னையில் இன்று (07. 02. 2024) தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களாக குறைந்து வந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ.46,800-க்கும் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ. 5,850க்கும் விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி, விலையில் மாற்றமின்றி ரூ.76க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பாஜகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள்.!

சென்னையில் நேற்றைய தினம் (06. 02. 2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்து ரூ.46,640-க்கும் , கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ. 5,830க்கும் விற்பனையானது. அதேபோல், ஒருகிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் குறைந்து ரூ.76க்கும், கிலோ வெள்ளி ரூ.700 குறைந்து ரூ. 76,000க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement