For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

தமிழில் ரீ எண்டரி கொடுக்கும் ஸ்ருதிஹாசன்!

06:40 PM Feb 05, 2024 IST | பால முருகன்
தமிழில் ரீ எண்டரி கொடுக்கும் ஸ்ருதிஹாசன்
Advertisement

நடிகை ஸ்ருதிஹாசன் கடைசியாக தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு ஸ்ருதிஹாசன் எந்த தமிழ் படத்திலும் நடிக்க கமிட் ஆகவில்லை. லாபம் திரைப்படம் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியானது.

இந்த திரைப்படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களில் நடிக்க சென்றுவிட்டார் என்றே கூறலாம். குறிப்பாக அவருக்கு தமிழை விட தெலுங்கு மற்ற மொழிகளில் தான் பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கிறது என்று கூட கூறலாம்.

தமிழில் பட வாய்ப்புகள் வராதது குறித்து பேட்டி ஒன்றில் கூட ஸ்ருதிஹாசன் "நான் வேணுமென்றே தமிழில் நடிக்க கூடாது என்று எல்லாம் இல்லை எனக்கு பட வாய்ப்புகள் வரவில்லை என்று மனம் திறந்து பேசவும் செய்திருந்தார். இந்த நிலையில், நீண்ட வருடங்களுக்கு பின்பு மீண்டும் தமிழில் ஸ்ருதிஹாசனுக்கு பட வாய்ப்புகள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ரெய்டு, வீரா. ராக்ஷசுடு, ஆகிய படங்களை இயக்கிய ரமேஷ் வர்மா அடுத்ததாக ராகவா லாரன்ஸை வைத்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். அந்த திரைப்படத்தினை ஸ்டுடியோ கிரீன் பேனரில் ஞானவேல் ராஜா தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஏற்கனவே ஒரு ஹீரோயினாக மிருணாள் தாக்கூர் இடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில், அடுத்ததாக தற்போது ஸ்ருதிஹாசனிடம் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Tags :
Advertisement