For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

மேடையில் கண்டித்தாரா அமித் ஷா? விளக்கம் கொடுத்த தமிழிசை!!

09:28 AM Jun 14, 2024 IST | பால முருகன்
மேடையில் கண்டித்தாரா அமித் ஷா  விளக்கம் கொடுத்த தமிழிசை
tamilisai soundararajan amit shah [file image]
Advertisement

தமிழிசை சௌந்தரராஜன் : சமீபத்தில் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜேபி நட்டா உள்ளிட்ட பலரும் கலந்து கொன்டு இருந்தார்கள். அப்போது மேடையில் தமிழிசை சௌந்தரராஜன் போய்க்கொண்டு இருந்த சமயத்தில் அமித் ஷா அவரை கூப்பிட்டு எதோ பேசினார்.

சற்று கோபத்துடன்  அமித் ஷா பேசுவதாகவும் தெரிந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வந்த நிலையில், பலரும் அமித் ஷா  தமிழிசை சௌந்தரராஜனை கண்டித்ததாக கூறதொடங்கி விட்டனர். பலரும்  தமிழனை அவமானப்படுத்துவது போல் இருக்கிறது என தங்களது கண்டனங்களை பதிவிட்டும் வந்தனர்.

இதனையடுத்து, இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் " அமித் ஷா என்னை மேடையில் இருக்கும்போது அழைத்து தேர்தலுக்குப் பிந்தைய பணிகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி கேட்டார்.

இதனை பற்றி நான் அவரிடம் விரிவாகக் பேசினேன். அப்போது நேரமின்மை காரணமாக, மிகுந்த அக்கறையுடன் அரசியல் பணிகளைத் தீவிரமாக செய்யுமாறு என்னை அறிவுறுத்தினார். தேவையற்ற வதந்திகள்  பரவுவதால் நான் இந்த விளக்கத்தை அளிக்கிறேன்" எனவும் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

Tags :
Advertisement