HomeTop Storiesஇந்தியா தமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமா லைஃப்ஸ்டைல்தொழில்நுட்பம்ஆன்மீகம்
Advertisement

நான் சிகரெட் பிடிச்சிட்டு இருந்தேன்..! 'தனுஷ் பயங்கர டென்ஷன்' ஆயிட்டாரு - ராஜ்கிரண்!

01:15 PM Mar 18, 2024 IST | பால முருகன்
rajkiran and dhanush {File Image]
Advertisement

Dhanush நடிகர் தனுஷ் நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் கலக்கி கொண்டு இருக்கிறார். அவர் முதல் படமான பவர் பாண்டி மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அடுத்ததாக அவர் தன்னுடைய 50-வது திரைப்படமான ராயன் படத்தையும் இயக்கி முடித்துள்ளார். விரைவில் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

read more- கதறி அழுது கால்ஷீட் கேட்ட அறிமுக இயக்குனர்? பீக்கில் இருந்தபோதே யோசிக்காமல் கொடுத்த சரத்குமார்!

தனுஷ் தான் இயக்கிய முதல் படமான பவர் பாண்டி படத்திலே தனக்குள் ஒரு இயக்குனரும் இருப்பதையும் வெளிக்காட்டிவிட்டார். அந்த படத்தில் நடித்த பிரபலங்கள் பலரும் தனுஷ் இயக்கத்தை பார்த்து சற்று ஷாக்  ஆகி அவரை புகழ்ந்தும் பேசி நீங்களே பார்த்து இருப்பீர்கள். அந்த வகையில், படத்தில் ஹீரோவாக நடித்த ராஜ்கிரண் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

READ MORE- அந்த நடிகருடன் காதலில் விழுந்தாரா நடிகை ரிது வர்மா?

இது குறித்து பேசிய ராஜ்கிரண் " பவர்பாண்டி படத்தின் படப்பிடிப்பில் தனுஷும் ரொம்பவே வேகம் கேமரா மேன் வேல் ராஜும் ரொம்பவே வேகம். ஒரு இடத்தில் ஷூட்டிங் முடிந்த பிறகு அடுத்த இடத்திற்கு வேகமாகவே சென்று விடுவார்கள். நான் அதிகமாக படப்பிடிப்பில் சிகரெட் பிடிப்பேன். ஒரு முறை ஒரு இடத்தில் காட்சியில் நடித்து முடித்துவிட்டு சிகரெட் பிடித்து கொண்டு இருந்தேன்.

read more- கால் அமுக்கிவிட வந்த மூத்த நடிகர்! கேப்டன் விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சி செயல்?

அப்போது சார் ஷாட் ரெடி என்று கூறினார்கள். அதன்பிறகு தான் தெரிந்தது வேல்ராஜ் அன்றயை தினத்திலே படப்பிப்பு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு எல்லாம் லைட்களை செட் செய்து வைத்துவிடுவார் என்று. இதனால் ஒரு காட்சியில் நடித்துவிட்டு அடுத்த காட்சிக்கு ரொம்ப நேரம் எல்லாம் இருக்காது சிகரெட் பிடித்துக்கொண்டு இருந்தாலும் வேகமாக கீழே போட்டு அனைத்துவிட்டு காட்சியில் நடிக்க செல்வேன்.

read more- கமல்ஹாசனை பார்த்தாலே நடுங்கும் பிரபல நடிகை! அப்படி என்ன செஞ்சிட்டாரு உலகநாயகன்?

ஒரு முறை இதனை தனுஷ் பார்த்துவிட்டார். பார்த்தவுடன் என்னிடம் பேசிக்கொண்டு இருந்த ஒருவரை அழைத்து ஏன்டா? ஐயா சிகரெட் குடித்துவிட்டு இருக்கிறார் அவரை போய் ஷாட் ரெடி ஆகிவிட்டது என்று கூப்பிடுவாயா? என கோபத்துடன் கேட்டார். அந்த அளவுக்கு என் மீது அவருக்கு ரொம்பவே பிரியம். அதைப்போல ஒரு கூட்டத்தில் என்னை ஒருவர்உரசி கொண்டு  சென்றுவிட்டார். இதனை பார்த்த தனுஷ் ஐயாவே உரசி கொண்டு செல்கிறாய் என அவரிடம் சண்டைபோட போய்விட்டார். எனக்கும் தனுஷை மிகவும் பிடிக்கும்" எனவும் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.

Tags :
ராஜ்கிரண்தனுஷ்ப. பாண்டிDhanushPa Paandipower paandiRAJKIRAN
Advertisement