For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

திரையரங்கில் மிஸ் பண்ணிட்டீங்களா? ஓடிடிக்கு வருகிறது 'டெவில்'!

01:19 PM Feb 28, 2024 IST | பால முருகன்
திரையரங்கில் மிஸ் பண்ணிட்டீங்களா  ஓடிடிக்கு வருகிறது  டெவில்
devil_tamil ott [File Image]
Advertisement

Devil Movie OTT : தமிழ் சினிமாவில் பொதுவாகவே சில நல்ல திரைப்படங்கள் வெளியானால் அதனை பார்க்க மக்கள் தவறுவது உண்டு. அப்படியான சில படங்கள் சில ஆண்டுகள் கழித்தோ அல்லது திரையரங்கிற்கு பிந்தை ஓடிடியில் வெளியான பிறகு அந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டுவது உண்டு. அப்படி தான் பூர்ணா நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான டெவில் (Devil)  திரைப்படமும் கூட.

READ MORE- தயவு செஞ்சு மன்னிச்சிடுங்க! வீடியோ வெளியீட்டு விளக்கம் கொடுத்த சிவகுமார்!

எதற்காக சொல்கிறோம் என்றால் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் எல்லாம் ஒரு வகையான புது அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுக்கும். படம் பார்த்த பலரும் படம் நன்றாக இருப்பதாகவே தங்களுடைய விமர்சனங்களை சமூக வலைத்தளங்களின் மூலம் தெரிவித்தனர். இருப்பினும் படக்குழு எதிர்பார்த்த அளவிற்கு படம் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை என்றே கூறலாம்.

READ MORE- தனுஷ் நடிகர் தான என்னத்தை இயக்கப்போறாருனு நினைச்சேன்…’ராயன்’ குறித்து சித்தப்பு பேச்சு!

இந்த டெவில் திரைப்படத்தினை இயக்குனர் ஆதித்யா இயக்கி இருந்தார். படத்தில் விதார்த், திரிகன், சுபாஸ்ரீ ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இயக்குனர் மிஷ்கின் இசையையும் அமைத்து இருந்தார். படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் வெற்றியை பெறாமல் தோல்வி படமாகவும் அமைந்தது என்று கூட சொல்லலாம்.

devil_tamil
devil_tamil [File Image]

READ MORE- சும்மா கிளப்பி விடாதீங்க! ‘கில்லி ரீ-ரீலீஸ்’ குறித்து குண்டை தூக்கிப்போட்ட தயாரிப்பாளர்.!

இந்த திரைப்படத்தை திரையரங்குகளுக்கு சென்று பார்க்க தவறிய ரசிகர்கள் படம் எப்போது எந்த ஓடிடியில் வெளியாகும் என ஆவலுடன் காத்திருந்தார்கள். அவர்களுக்காகவே ஒரு அசத்தலான அப்டேட் தற்போது கிடைத்து இருக்கிறது. அதன்படி, டெவில் திரைப்படம் வரும் மார்ச் 1-ஆம் தேதி டென்ட்கோட்டா என்கிற ஓடிடியில் வெளியாகவுள்ளது. இன்னும் இதனை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement