For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

பட்டாசு ஆலை விபத்து.! உயிரிழந்தோர், காயமடைந்தோருக்கு நிவாரண தொகை அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

09:01 AM Mar 06, 2023 IST | மணிகண்டன்
பட்டாசு ஆலை விபத்து   உயிரிழந்தோர்  காயமடைந்தோருக்கு நிவாரண தொகை அறிவித்த முதல்வர் மு க ஸ்டாலின்
Advertisement

பட்டாசு ஆலை  விபத்தில் உயிரிழந்த பெண்ணிற்கு நிவாரண உதவியை அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 

கடலூர்  புதுச்சேரி சாலையில் உள்ள சிவனார்புரத்தில் செயல்பட்டு வந்த தனியார் நாட்டு பட்டாசு ஆலையில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், 9 பேருக்கு தீ காயம் ஏற்பட்டது. புதுச்சேரியை சேர்ந்த மல்லிகா எனும் பெண் தீ விபத்தில் உயிரிழந்துவிட்டார்.

இருவர் கைது : இந்த சம்பத்துவத்தை அடுத்து பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சேகர் மற்றும் அவரது மனைவி கோசலா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

முதல்வர் நிதியுதவி : இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த மல்லிகா குடும்பத்தாருக்கு 3 லட்சம் ரூபாம் நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த மல்லிகா குடும்பத்தாருக்கு தனது இரங்கலையும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் நிவாரண நிதி : மேலும், காயமடைந்த 9 பேருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் அறிவிக்கப்ட்டுள்ளது. இந்த நிதியுதவி முதல்வர் நிவாரண நிதியில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement